ETV Bharat / entertainment

"அடடா மழைடா அட மழைடா" - ஏப்.11-ல் ரீ ரிலீசாகும் 'பையா' திரைப்படம்! - Paiyaa movie re release - PAIYAA MOVIE RE RELEASE

Paiyaa movie Re release: கார்த்தி, தமன்னா, ஜெகன் உள்ளிட்டோர் நடித்த 'பையா' திரைப்படம் 14 வருடங்கள் கழித்து வரும் 11 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Paiyaa movie Re-release
பையா திரைப்படம் ரீ-ரிலீஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 1:17 PM IST

சென்னை: இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா, நகைச்சுவை நடிகர் ஜெகர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'. காதல், ஆக்ஷன், டிராவலிங் திரில்லரை மையமாக கொண்ட இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அடடா மழைடா அடமழைடா, என் காதல் சொல்ல நேரமில்லை உள்ளிட்ட பாடல்கள் பலரது செல்போன் ரிங்டோனாக மாறியிருந்தது.

நடிகர் கார்த்தி இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். இதனையடுத்து, இவர் இருக்குநர் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அறிமுக நடிகர் ஒருவரின் படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றதில்லை என்ற அளவிற்கு இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் மூலம் நடிகர் கார்த்தி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கவரப்பட்டார். இதனையடுத்து, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் பையா திரைப்படத்தில் நடித்தார். பருத்திவீரன் படத்தில் கிராமத்து நபராக நடித்த கார்த்தி இப்படத்தில் துறுதுறு இளைஞராக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். பையா திரைப்படம் நடிகர் கார்த்தியின் திரை வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தமன்ன நடித்திருந்தார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இவரது இசையில், இப்படத்தில் உள்ள அனைத்துப் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று, இன்று வரையிலும் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவான பையா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் பெரும் வெற்றியை குவித்தது.

இந்நிலையில், 2010ல் வெளியான பையா திரைப்படம், 14 ஆண்டுகள் கழித்து புதிய டெக்னாலஜி அடிப்படையில், மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக, படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி பையா திரைப்படம் வரும் 11 ஆம் தேதி உலகமெங்கும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. முன்னதாக, இன்று பையா திரப்படத்தின் ஒரு காட்சி, கமலா திரையரங்கில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "பாக் எனும் ஆவிகளின் சக்தி பற்றிய சுவாரஸ்யமான விஷயம் சிக்கியது" - இயக்குநர் சுந்தர் சி கூறும் அப்டேட்! - Aranmanai 4 Trailer Launch Event

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.