ETV Bharat / entertainment

"மகள் இறந்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை" - இளையராஜா பேச்சு! - Ilayaraja Birthday - ILAYARAJA BIRTHDAY

Music Composer Ilayaraja: என் மகளை பறிகொடுத்த காரணத்தினால், எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை, உங்களுக்காகத் தான் இந்த கொண்டாட்டம் எல்லாம் என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

இளையராஜா,கமல்ஹாசன், மணிரத்னம் புகைப்படம்
இளையராஜா,கமல்ஹாசன், மணிரத்னம் புகைப்படம் (credits - kamalhaasan X page and ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 4:24 PM IST

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தனது 81வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இளையராஜாவின் பிறந்தநாளை ஒட்டி , அவருக்கு வாழ்த்து தெரிவிக்க 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு வந்தனர்.

இளையராவைச் சந்தித்து ஆசி பெற்ற ரசிகர்கள் பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ரசிகர்களை இளையராஜா சந்தித்து, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடைய நண்பர்கள் மற்றும் இசைக்குழுவினர் வரிசையாக வந்து அவரிடம் ஆசி பெற்றனர். மேலும், பல இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

பியானோ இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம், நாட்டுப்புற பாடகர் மதிச்சியம் பாலா மற்றும் பின்னணி பாடகர் முகேஷ் ஆகியோர் இளையராஜாவைச் சந்தித்து, வாழ்த்துக்கள் தெரிவித்து ஆசி பெற்றுச் சென்றனர்.

நாட்டுப்புற பாடகர் மதிச்சியம் பாலா கூறியதாவது, "இசைஞானி இளையராஜா பல்லாண்டு காலம் வாழ வேண்டும். இளையராஜாவிடம் ஆசி பெற்றது மன திருப்தியை அளிக்கிறது. ஒட்டுமொத்த கிராமியக் கலைஞர்கள் சார்பாக இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்றார்.

பியானோ இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் கூறியதாவது, "இளையராஜாவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நான் அவரிடம் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக கற்று வருகிறேன். இளையராஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, "நீங்கள் தான் எனக்கு வாழ்த்து சொல்கிறீர்கள். என் மகளைப் பறிகொடுத்த காரணத்தினால், எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. உங்களுக்காகத் தான் இந்த கொண்டாட்டம் எல்லாம்” என்று கூறினார்.

மணிரத்னம், இளையராஜா இருவருக்கும் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து: இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் தங்களது பிறந்தநாளை இன்று (ஜூன் 2) கொண்டாடுகின்றனர். இதனை ஒட்டி, இருவருக்கும் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், "இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு. மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது.

இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்னம் பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க" என பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "அப்பா இயக்கத்தில் நடிக்க போவது எப்போது?" - மகள் அதிதி ஷங்கர் சொன்ன அப்டேட்! - Indian 2 Audio Launch

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.