ETV Bharat / entertainment

"அப்பா இயக்கத்தில் நடிக்க போவது எப்போது?" - மகள் அதிதி ஷங்கர் சொன்ன அப்டேட்! - Indian 2 audio launch - INDIAN 2 AUDIO LAUNCH

Indian 2 audio launch: 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று பிரம்மாண்டமாக (ஜுன் 1) நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், ரோபோ சங்கர், பாடலாசிரியர் பா.விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரோபோ சங்கர், பா.விஜய் மற்றும் அதிதி சங்கர்
ரோபோ சங்கர், பா.விஜய் மற்றும் அதிதி சங்கர் (Photo Credit -ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 1:05 PM IST

சென்னை: லைகா புரொடக்சன்ஸ் - சுபாஸ்கரன் தயாரித்து சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'இந்தியன் 2' ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் பா.விஜய் வரிகளில் உருவான இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நேற்று (ஜூன் 1) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், பாபி சிம்ஹா, நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, பிரம்மானந்தம், மிர்ச்சி சிவா, ரோபோ சங்கர், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், ஷங்கர், நடிகைகள் அதிதி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீதி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடிகர் ரோபோ ஷங்கர், பாடலாசிரியர் பா.விஜய் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

நடிகர் ரோபோ சங்கர்: "எங்களுக்கு இன்று ரொம்ப சந்தோசமாக நாள். இதற்காக தான் காத்திருந்தோம். இந்தியன் படம் அப்போதே நல்ல ஹிட். இப்போது 25 வருடங்கள் கழித்து இந்தியன் 2 வருகிறது. இப்போதே தேசிய விருதுக்காக இந்த படம் தயாராக உள்ளது.

எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் கமல் ரசிகர்கள். ஒரு நடிகனுக்காகக் கோயம்புத்தூரில் மாநாடு நடந்தது கமல்ஹாசனுக்கு மட்டும்தான். இந்தியன் 1 ரீரிலீஸை நான் ஒரு தியேட்டரில் கொண்டாடப் போகிறேன். மேலும் இந்தியன் 2 ரிலீஸுக்கும் காத்திருக்கிறன்" என்று கூறினார்.

நடிகை அதிதி சங்கர்: "அப்பா இயக்கத்தில் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்கிறீர்கள்? அதற்கான கதாபாத்திரம் இருந்தால் அப்பா எனக்கு அந்த வாய்ப்பை அளிப்பார். அவரை பற்றி உங்களுக்கு தெரியும்.‌ நான் அடம்பிடிக்க மாட்டேன். 'இந்தியன் 2' படம் வெளியாவதைப் பார்க்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன்" என்று அதிதி சங்கர் கூறினார்.

பாடலாசிரியர் பா.விஜய்: "ரொம்ப மகிழ்ச்சியான நாள். பாய்ஸ் படத்தில் இருந்து சங்கர் சார் படத்தில் வாய்ப்பு கொடுத்து வருகிறார். 'பாரா' பாடல் உலக தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போதெல்லாம் மக்கள் பாடல் வரிகளை கூர்ந்து கவனிக்கிறார்கள்.

பாடல் வரிகள் நல்லா இல்லைனா திட்றாங்க.‌ நல்லா இருந்தால் கொண்டாடுகிறார்கள்.‌ அனிருத் டியூன் கொடுக்கும் போதே நல்லா இருந்தது. முதலில் போட்டதே அந்த டியூன் தான். அனிருத்தின் குரல் பாடல்களை வேறு டிராக்கிற்கு கொண்டு சென்றுள்ளது. கமல்ஹாசன் பாடல்களை கேட்டதும் கைகொடுத்து பாராட்டினார். இசை பெரிதா, பாடல் பெரிதா என்று கேட்டால் இரண்டுமே பெரிதுதான்" என்று பா.விஜய் பேசினார்.

இதையும் படிங்க: 'இந்தியன் என்ற தலைப்புக்கு சரியான ஆள் கமல் தான்' - இந்தியன் 2 ஆடியோ விழாவில் சிம்பு பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.