தேனி: தேனி மாவட்டம், தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்காக நடிகர் ஜீவா வந்து ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது,"நான் தேனிக்கு ரொம்ப நாட்கள் கழித்து வந்திருக்கிறேன். இதற்கு முன்னதாக, தெனாவட்டு படத்திற்காக தேனிக்கு வந்தேன். அதற்கு பின் இப்போ தான் வந்திருக்கிறேன். பல இன்ட்ஸ்டிரியில் பல விஷயங்கள் நடக்கிறது. அனைவரின் முகத்திலும் சிரிப்பை ஏற்படுத்துவது தான் என்னுடைய வேலை.
இதற்கிடையில், ஹேமா கமிட்டி தொடர்பான செய்தியாளர்கேள்விக்கு, இந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என செய்தியாளரை ஒருமையில் பேசி உள்ளார். மேலும், எந்த இடத்துல வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கிறாய் என்று கோபத்துடன் திட்டியவாறு" சென்றார். இதனால் செய்தியாளர்களுக்கும், ஜீவாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஹேமா கமிட்டி: மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேரள அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், பாபுராஜ் உள்ளிட்ட பலர் மீதும் மலையாள நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதன் விளைவாக, மலையாள நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவினர் மற்றும் நடிகர்கள் உட்பட 17 பேர் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : 'தி கோட்' எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ்?.. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கொடுத்த அப்டேட்! - THE GOAT