ETV Bharat / entertainment

"நடிகர் விஜய் அழைப்பு விடுத்தால் வீட்டுக்கு வேண்டுமானால் செல்வேன்" - ஜெயம் ரவி!

Actor Jayam Ravi: நடிகர் விஜய் அரசியல் பயணத்திற்காக திரையுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டால் அவரின் இடத்தை பூர்த்தி செய்ய யாராலும் முடியாது என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 8:55 PM IST

மதுரை: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சைரன். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் ஜெயம் ரவி மதுரையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மதுரைக்கு வந்தேன். மதுரை ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்ததில் மகிழ்ச்சி. திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்கள் கைதட்டி மகிழ்வதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது இயக்குனர் ஆண்டனி பாக்யராஜின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. சைரன் படத்திற்கு அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிக திருப்தியான உணர்வை அளிக்கிறது. நடிகர் சங்கத்திற்கென்று விரைவில் கட்டடம் கட்டி முடிக்கப்படும்.

அதற்கான பணிகளில் தீவிரமாக திரையுலக நண்பர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் விஜயகாந்த் பெயரை நடிகர் சங்க கட்டிடத்திற்கு சூட்டுவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும்" என்றார். தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தெரிவிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "என்னுடைய திரைப்பட வட்டம் மிகக் குறுகியது. சினிமா மட்டுமே நான் அறிந்தது" என பதில் அளித்தார்.

மேலும், நடிகர் விஜய் அழைப்பு விடுத்தால் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, "விஜய் அண்ணன் அழைப்பு விடுத்தால் அவரது வீட்டுக்கு வேண்டுமென்றால் சென்று வரலாம். அதேபோல் நடிகர் விஜய் அரசியல் பயணத்திற்காக திரையுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டால் அவரின் இடத்தை பூர்த்தி செய்ய யாராலும் முடியாது" என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து சைரன் படத்தின் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் கூறுகையில், "இது எனது முதல் படம். அதேபோல் முதல் முறையாக மதுரையில் படம் பார்க்கிறேன். அது எனது முதல் படமாக அமைந்திருக்கிறது. மேலும், ஜெயம் ரவி சாரின் ரசிகர்களுக்கு நன்றி. நல்ல வரவேற்பு தந்துள்ளனர். மிக்க மகிழ்ச்சி" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்கள் - சாதனை படைத்த அஷ்வின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.