ETV Bharat / entertainment

தமிழில் தற்போது வரை நல்ல படங்கள் வரவில்லை: 'ரெட்ட தல' பட விழாவில் இயக்குநர் மோகன் ராஜா கருத்து - Retta Thala - RETTA THALA

Retta Thala First Look Release: இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜயின் 36வது படமான 'ரெட்ட தல' படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது.

Retta Thala
ரெட்ட தல
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 11:28 AM IST

சென்னை: சென்னை தனியார் நட்சத்திர விடுதியில், இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜயின் 36வது படமான 'ரெட்ட தல' படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் நடிகர்கள் அருண் விஜய், சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் அருண் விஜய்யின் தந்தையும் நடிகருமான விஜயகுமார் மற்றும் இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் நடிகர் அருண் விஜய் பேசுகையில், "இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் கூறிய போது, நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். தடம் படத்திற்கு பிறகு டபுள் ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளேன். இந்த படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவுக்கு நன்றி. என்னை அறிந்தால் படத்தில், நான் ஓடி வரும் காட்சிகள் எனக்கு நினைவு இருக்கிறது.

அதை சரியான முறையில் கொண்டு வந்த எடிட்டர் ஆண்டனிக்கு நன்றி. இந்த படத்தின் தலைப்பு சரியாக அமைந்து இருக்கிறது. போட்டோ சூட் நடக்கும் போதே, இப்படத்தின் இயக்குநரின் வேலையைப் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்த தலைப்பை கொடுத்த இயக்குநர் முருகதாஸுக்கு நன்றி. அஜித் படத்தில் நடித்த பிறகு தான், எனக்கு எல்லா தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் தலைப்பிற்கு அஜித் நல்ல வரவேற்பு கொடுப்பார் என நினைக்கிறேன்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு, எனக்கு என் அப்பா தான் ரோல் மாடல். அதைத் தொடர்ந்து, கிருத்திக் ரோஷன் மிகப் பெரிய ரோல் மாடலாக இருந்தார். பாலா படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு சிரமமாக தெரியவில்லை. வேறு ஒரு பரிமாணத்தில், வணங்கான் திரைப்படத்தில் நீங்கள் என்னைப் பார்க்க முடியும்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இயக்குநர் மோகன் ராஜா பேசுகையில், "தமிழில் தற்பொழுது வரை நல்ல படங்கள் வரவில்லை. நல்ல படம் வரவேண்டும் என மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். என் தம்பியை விட, அருண் விஜய் தான் என்னை அன்பாக அண்ணா என்று அழைக்கக்கூடியவர். ஒரு நடிகர் 25 ஆண்டுகள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள். நானும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இருவரும், இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசுகையில், "சின்ன விஷயத்தைக் கூட என்னை அழைத்துப் பேசக் கூடியவர் தான் தயாரிப்பாளர். கதையை எப்படி மக்களிடம் கொண்டு செல்கிறோம் என்பது தான் மிக முக்கியம். ஒரு ஆரோக்கியமான குழுவாக இந்த குழு அமைந்துள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். நேற்றைய முந்தினம் (திங்கட்கிழமை) கேரளாவில் நடைபெற்ற விழாவில் RDX படத்தில் இடம் பெற்ற நீல நிலவே பாடலுக்கு எனக்கு விருது வழக்கப்பட்டது.

எல்லோரும் நான் படத்தில் பின்னணி இசை மட்டும் தான் நன்றாக செய்வேன் என்றும் பாடல் எல்லாம் சரியாக கொடுக்கமாட்டேன் எனவும் நினைக்கிறார்கள். ஆனால், நேற்று கேரளாவில் என் பாடலுக்கு விருது கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. டீமாண்டி காலாணி படத்திற்கு இசை முழுவதும் முடிந்துவிட்டது. மேலும், படத்தின் இசை நன்றாக வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, ரெட்ட தல படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் பேசுகையில், "ஒரே மாதிரியான இரண்டு மனித மிருகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு, ஒன்றை ஒன்று கடித்து சாப்பிட சண்டை போடுவதாக, கதைக் களம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக மெனக்கெட்ட நடிகர் அருண் விஜய்க்கு நன்றி. இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். இந்த தலைப்பு முருகதாஸ் சாருடைய தலைப்பு. அவரிடம் நான் கேட்ட உடனேயே, அவர் எனக்காக இந்த தலைப்பைக் கொடுத்தார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மண்டைக்கு சூரு ஏறுதே'.. சூது கவ்வும் 2 பாடல் வெளியானது! - Mandaikku Sooru Eruthey Song

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.