ETV Bharat / education-and-career

“பள்ளி மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்க”: அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பள்ளி கட்டடங்களின் நிலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை அனைத்து பள்ளி நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2024, 10:57 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் 'பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் மதுமதி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் ஆர்த்தி பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி கூறும்போது, “தமிழகத்தின் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் மூலம் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளியில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: அதனைப் பின்பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பருவமழையின் போது பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் பழைய கட்டடங்களைப் பொதுப்பணித்துறை மூலம் அகற்றும் பணி காலாண்டுத் தேர்வு விடுமுறையின் பொது தொடங்கப்பட்டது. அப்பணிகளை விரைவுபடுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: "அதிமுக ஒரு சீட் கூட ஜெயிக்காது" -பெங்களூரு புகழேந்தி ஆவேசம்!

அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்: பழைய மற்றும் பழுதடைந்துள்ள கட்டடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள் நிரம்பியுள்ள இடங்களுக்கு மாணவர்கள் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தகுந்த பாதுகாப்பு அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் தமிழகம் மழையில் இருந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், பள்ளிக் கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் காண்காணிக்க வேண்டும். எல்லா வகையிலும் பள்ளியின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்” என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று பள்ளியில் மழைநீர் தேங்கி இருந்தததா? என்பதை கேட்டறிந்தார்.மேலும் மின்சார கசிவு இருக்கிறதா? என்பதையும் புதியதாக கட்டப்பப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தின் நிலையையும் கேட்டறிந்ததுடன் பள்ளி மாணவர்களிடம் தங்களின் பகுதியில் மழைநீர் வடிந்து விட்டதா? என்பதை கேட்டறிந்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.