ETV Bharat / education-and-career

ஐஐடி மெட்ராஸில் இளம் கண்டுபிடிப்பாளர்களின் அசத்தல் மாதிரிகள் கண்காட்சி! - IIT MADRAS INVENTION DEMO DAY

இந்த கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் விழாவானது மாணவர்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கூறியுள்ளார்.

ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2024, 7:12 PM IST

சென்னை: மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் “நிர்மாண செயல்விளக்க நாள் 2024”( DEMO DAY) விழா இன்று ஐஐடி மெட்ராஸில் நடைபெற்றது. ஐஐடி மெட்ராஸில் முதல் முறையாக இது போல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவானது இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் கருத்தாக்கங்களை சந்தைக்கு ஏற்ப தயாரிக்கவும் எடுத்த முன்னெடுப்பாக கருதப்படுகிறது. இதில் செயற்கை தகவல் தொழில்நுட்பம், ஹெல்த்கேர், நிலைத்த தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களிடம் காட்சிப் படுத்தினர்.

இந்த கண்காட்சியை ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள்) சத்தியநாராயணா என்.கும்மாடி, மெட்ராஸ் ஐஐடி ஆலோசகர் (கண்டுபிடிப்புகள்- தொழில்முனைவு) பேராசிரியர் பிரபு ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இளம் கண்டுபிடிப்பாளர்களின் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த கண்காட்சியில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “ இந்த விழாவானது மாணவர்களை
தொழில்முனைவோராக மாற்றும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் மாணவர்களுக்கான வாய்ப்பை வழங்கி உள்ளோம்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் பள்ளி மாணவர்களுக்கான சான்றிதழ் படிப்பு அறிமுகம்!

முதலீட்டாளர்கள், தொழில் முன்னணியினர், சாத்தியமான கூட்டு முயற்சியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதால் இளம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் 40 மாணவர்கள் குழு தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளனர்.

தண்ணீரின் அழுத்ததால பொருட்களை கட்செய்யும் தொழில்நுட்பம், தொழிற்சாலை வெப்பத்தில் இருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஆடை, மருத்துவம், செயற்கைத் தொழில்நுட்பம் போன்றவற்றில் மாணவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை வைத்துள்ளனர். செயற்கைத் தொழில்நுட்பத்தின் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது.

மாணவர்கள் தலைமையில் தற்போது ஐஐடியில் 85 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிர்மாண் ஆதரவு அளித்து வருகிறோம். இத்திட்டத்தின்கீழ் 26 நிறுவனங்கள் ஏற்கனவே செயல்பாட்டைத் தொடங்கி ரூ.1000 கோடிக்கும் அதிகமான அளவுக்கு நிதி திரட்டியுள்ளனர்” என்றார்.

மேலும் இது குறித்து பேசிய ஐஐடி மெட்ராஸ் ஆலோசகர் பிரபு ராஜகோபால், “ புதிய கண்டுபிடிப்புகளை சந்தைக்கு ஏற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களாக மாற்றுவதற்கு ஆசிரியர்களும், மாணவர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அனைவருக்கும் ஐஐடி என்ற இலக்கை அடைவதே எங்களது குறிக்கோளாகும். எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மெட்ராஸ் ஐஐடி உடன் ஏதாவது ஒரு வகையில் இணைய விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கான சேவைகளை வழங்கத் தயாராக உள்ளோம்.

என்ஐடியில் படித்த மாணவிகள் நிலக்கரிக்கு பதில் விவசாயத்தில் இருந்து வரும் கழிவுகளை மறுசுழற்சி முறையில் பயோமாஸ் பெல்லட் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், இதனை அதிகளவில் உற்பத்தி செய்யும் போது, நிலக்கரிக்கு பதிலாக பயன்படுத்த முடியும்.

மேலும் தற்பொழுது வீடுகளில் புகையில்லாமல் விறகு அடுப்பிற்கு பதில் பயோமாஸ் அடுப்பை பயன்படுத்தலாம். தொழிற்சாலைகளில் வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் ஆடையை வடிவமைத்துள்ளனர். இது போன்ற 30க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் நிர்மாணில் 85-க்கும் மேற்பட்ட குழுக்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் கண்டுபிடிப்பாளர்கள், ஆசிரியர்கள், தொழில் முதலீட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என இதில் தொடர்புடைய அனைவருக்கும் எங்களது பணி குறித்த பார்வையை இந்நிகழ்வு வழங்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.