சென்னை: பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வுகள் 2025 மார்ச்/ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, கடந்த 8 ஆம் தேதி முதல் (டிச.8) இன்று வரை (டிச.17) ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இக்கால அவகாசம் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்க இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2025, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க 08:12.2024 முதல் 17:12.2024 வரை கால
அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், தொடர்கனமழை காரணமாக தேர்வர்களின் நலன் கருதி இக்கால அவகாசம் 20.12.2024 வரை நீட்டிக்கப்படுகிறது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.