ETV Bharat / business

தங்கம் வாங்க சரியான நேரம்..சென்னையில் இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று (அக்டோபர் 10) தங்கத்தின் விலை 2வது நாளாக குறைந்து, ஒரு சவரன் ரூ.56,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 12:45 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்திய மக்களின் சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது தங்கம். அந்த வகையில், இந்தியர்களிடம் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுவாக தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கத்தின் இறக்குமதி வரி குறைப்புக்குப் பிறகு மளமளவெனச் சரிவை சந்தித்த தங்கம் விலை, அடுத்த சில வாரங்களிலேயே மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக உயர்ந்த தங்கம் ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ.3 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து சாமானிய மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், நகையின் விலை என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறத்துவங்கியது.

இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத நிலையில் நேற்று (அக்.9) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, சவரனுக்கு ரூ.560 அதிரடியாக சரிந்தது. அதனால் நகை முதலீட்டாளர்களும், இல்லத்தரசிகளும் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை 2வது நாளாகக் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (அக்.10) ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 25 ஆகவும், சவரன் ரூ.56 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 664-க்கும், ஒரு சவரன் ரூ.61 ஆயிரத்து 312-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ரூ.1 லட்சத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (அக்டோபர் 10):

  • 1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.7,025
  • 1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.56,200
  • 1 கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ.7,664
  • 1 சவரன் தங்கம் (24 கேரட்) - ரூ.61,312
  • 1 கிராம் வெள்ளி - ரூ.100
  • 1 கிலோ வெள்ளி - ரூ.1,00,000

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.