சென்னை: தங்கம் என்பது அழகையும், ஆடம்பரத்தையும் வெளிப்படுத்தும் பொருளாக இருப்பதைவிட சாமானிய மக்களின் சேமிப்பு பொருளாகவும் உள்ளது. பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பொருட்களில் தங்க நகையும் ஒன்று. மேலும், தங்கம் வாங்குவது சாமானிய மக்களின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.
மேலும், தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதார சந்தையில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (நேற்று) நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.54,720-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.53,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலையில் கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.6650-ஆகவும், சவரன் ரூ.53,200 விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வெள்ளி விலை கிராம் ரூ.100.50 ஆக விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.4.50 குறைந்து 96 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.96,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: நூதன முறையில் துபாயிலிருந்து தங்கத்தைக் கடத்திய குருவிகள் கைது!