சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தினந்தோறும் ஏற்றம் காணும் தங்கத்தின் விலை, அவ்வப்போது குறைகிறது. இருந்து பெரிதளவில் குறைவதில்லை. ஆனால், ஏற்றம் காணும் போது 400, 500 என மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தங்கம் என்பது ஆடம்பர ஆபரணமாக மட்டுமில்லாமல், இந்திய மக்களின் சேமிப்பின் முக்கிய பொருளாகவும் அமைகிறது. ஆனால், தற்போது சாமானிய மக்களின் எட்டாக்கனியாகத் தங்கம் மாறி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தாறுமாறாக உயரும் தங்கத்தின் விலையில் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தற்போது, நேற்று சவரனுக்கு ரூ.440 அதிரடியாக உயர்ந்த நிலையில், ரூ.55 ஆயிரத்தைக் கடந்தது. அதாவது நேற்றை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 120க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து, வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை பெரிதும் மாற்றம் இல்லாமல் கிராமுக்கு வெறும் 5 ரூபாய் குறைந்துள்ளது.
அந்த வகையில் சென்னையில், இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 885-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.40 குறைந்து, சவரன் ரூ.55 ஆயிரத்து 80-க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கமும் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.90க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.90 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஏப்ரல் 20):
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,885
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.55,080
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.7,511
- 1 சவரன் தங்கம் (24-கேரட்) - ரூ.60,088
- 1 கிராம் வெள்ளி - ரூ.90
- 1 கிலோ வெள்ளி - ரூ.90,000