சென்னை: சர்வதேச பொருளாதார சூழலைப் பொறுத்தும், கமாடிட்டி மார்க்கெட்டை பொறுத்தும் தங்கத்தின் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. அது மட்டுமின்றி சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என பல்வேறு காரணங்களால் தான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் போன்று உலக நாடுகளில் உருவாகி உள்ள போரின் எதிரொலியாகவும், பொருளாதார மந்தம் காரணமாகவும் கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை மடமடவென உயர்ந்து வந்தது. இந்த நிலையில், வாரத்தின் முதல் நாள் பங்குச் சந்தை துவங்கியவுடனே சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது நகை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்: கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை மட்டுமே கண்டு வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென சரிந்தது இல்லத்தரசிகளை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இவ்வளவு குறைந்த தங்கம் இனிவரும் நாட்களில் எவ்வளவும் அதிகரிக்கும் எனத் தெரியவில்லை, ஆகையால் குறையும் போதே நகையை வாங்கிக் கொள்ளுங்கள் மக்களே என நகை முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ள தங்கம், ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்து 320 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில், இன்று (திங்கட்கிழமை) காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 790க்கும், ஒரு சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, சவரன் ரூ.54 ஆயிரத்து 320க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.89.50க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.89 ஆயிரத்து 500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஏப்ரல் 15):
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,790
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.54,320
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.7,407
- 1 சவரன் தங்கம் (24-கேரட்) - ரூ.59,256
- 1 கிராம் வெள்ளி - ரூ.89.50
- 1 கிலோ வெள்ளி - ரூ.89,500