சென்னை: இந்தியர்களின் சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது தங்கம் தான். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும், பரிசாக வழங்குவதற்கும் தங்கம் பயன்படுத்தப்படுவதால், அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் தங்கத்துக்கு எப்போதும் மவுசு இருந்தே கொண்டே உள்ளது. அப்படிப்பட்ட தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த மாதம் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைந்ததால், தங்கத்தின் விலை ரூபாய் 5000 வரை குறைந்து, சவரன் ரூபாய் 50640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு சமீபகாலமாக இறங்குமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, மீண்டும் கணிசமாக அதிகரித்து, கடந்த வாரம் முதல் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்றைய ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 6 ஆயிரத்து 565-க்கும், சவரன் ரூபாய் 52 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்றும் வெள்ளி கிராம் ரூபாய் 88.50-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூபாய் 88 ஆயிரத்து 500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த வாரம் முதல் இன்று வரை சவரனுக்கு ரூபாய் ஆயிரத்து 880 வரை உயர்ந்து, சவரன் ரூபாய் 52 ஆயிரத்து 520 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம், வெள்ளி விலை குறித்தும், சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைந்ததால் தங்கம், வெள்ளி விலை குறைந்திருந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் தங்கத்தின் தேவை அதிகரித்ததாலும், பங்குசந்தையின் தாக்கம், பொருளாதார நிலைபாடு ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த வருட இறுதிக்குள் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 60 ஆயிரம் வரை உயர வாய்ப்பு உள்ளது” என்று சாந்தகுமார் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: யுபிஐ மூலம் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை.. ரெப்போவில் மாற்றம் ஏதும் இல்லை ஆர்பிஐ வெளியிட்ட அப்டேட்!