டெல்லி : வரும் மார்ச் 12ஆம் தேதி முதல் பெங்களூரு, புவனேஸ்வர், விசாகப்பட்டனம், விஜயவாடா ஆகிய ரயில் நிலையங்களில் உணவு டெலிவிரி செய்ய உள்ளதாக பிரபல உணவு விநியோக சங்கிலியான ஸ்விக்கி தெரிவித்து உள்ளது.
அடுத்தடுத்த வாரங்களில் இந்த சேவையை மேலும் 59 ரயில் நிலையங்களில் நீட்டிக்க திட்டமிட்டு உள்ளதாக ஸ்விக்கி தெரிவித்து உள்ளது. முன் கூட்டியே புக்கிங் செய்யும் உணவுகளை ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட நேரத்தில் டெலிவிரி செய்வது தொடர்பாக இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசியுடன் ஸ்விக்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது.
ரயில் பயணிகள் தங்களது பிஎன்ஆர் நம்பர் மூலம் ஐஆர்சிடிசி செயலியில் முன்கூட்டியே உணவு ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றும், குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஸ்விக்கி ஊழியர்கள் மூலம் பயணிகள் தாங்கள் ஆர்டர் செய்த உணவை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்விக்கி உடனான இந்த கூட்டு முயற்சி தங்களது பயணிகளுக்கு அதிக வசதியையும் உணவு விருப்பங்களை எளிதில் தேர்வு செய்யும் இலகுத் தன்மையும் அளிப்பதோடு பயணிகளின் பயணத்தை மேலும் மறக்க முடியாததாக மாற்றும் என ஐஆர்சிடிசி தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநர் சஞ்சய் குமார் ஜெயின் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : உலக பணக்காரர்கள் பட்டியல்: ஜெப் பெசாஸ் முதலிடம்! டாப் 5ல் உள்ள ஒற்றுமை என்ன?