ETV Bharat / business

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்! - சக்திகாந்த தாஸ்

Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் 6.5 சதவீதத்திலே தொடரும் என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

Reserve Bank Governor Shaktikanta Das announced no change in the repo rate
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை
author img

By ANI

Published : Feb 8, 2024, 2:25 PM IST

Updated : Feb 10, 2024, 3:43 PM IST

டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதம் எனப்படும் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்போது வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும். இதனால் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், ரெப்போ வட்டி விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் வெளியாகும்போது அனைவரின் கண்களும் அதனை உற்று நோக்கும்.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு (Monetary policy meeting), ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒருமுறை கூடி, ரெப்போ வட்டி விகிதம் தொடர்பாக முடிவெடுப்பது வழக்கம். நிதி ஆண்டிற்கு 6 முறை நிதிக் கொள்கை குழு கூடி, பண வீக்கத்தை சரிசெய்யும் வகையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கும். அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் எம்பிசி கூட்டம், நேற்று முன்தினம் (பிப்.6) மும்பையில் துவங்கியது.

இந்நிலையில், மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, இன்று (பிப்.8) அறிக்கையை வாசித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளார். பணவீக்கம் அபாய நிலையில் இல்லாததாலும், பொருளாதாரம் சீரான வளர்ச்சியில் செல்வதாலும், ஏற்கனவே உள்ள ரெப்போ வட்டி விகிதமான 6.5 சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம், கடைசியாக 250 புள்ளிகளை உயர்த்தி, ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தி இருந்தது. அதற்குப் பின்னர் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வறண்ட நிலையில் தென்னிந்தியாவின் நயாகரா.. கழுகு பார்வையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் பரிதாப நிலை!

Last Updated : Feb 10, 2024, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.