ETV Bharat / business

Flipkart Big Billion Days விற்பனை தேதி அறிவிப்பு... 80% வரை ஆஃபர்.. எந்தெந்த பொருட்களுக்கு கிடைக்கும்? - Flipkart Big Billion Days 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 5:02 PM IST

Flipkart Big Billion Days Sale Date Announced: பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட், தங்களது ஃப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கான பிக் பில்லியன் டேஸ் விற்பனை தேதியை அறிவித்துள்ளது.

Flipkart Big Billion Days Related Image
Flipkart Big Billion Days Related Image (Credits - Flipkart and ETV Bharat)

ஹைதராபாத்: பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்டின் பிக் பில்லியன் டேஸ் (Flipkart Big Billion Days) விற்பனை என்பது ஆன்லைன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. மேலும், இந்த விற்பனை ஃப்ளிப்கார்டின் மிகப்பெரிய விற்பனையாக காணப்படுகிறது.

அதுமட்டும் அல்லாது, இந்த விற்பனையில் பல்வேறு பிராண்டுகளின் பொருட்கள் குறைவான மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. அந்தவகையில் தற்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனம், தங்களது ஃப்ளிப்கார்ட் பிளஸ் (Flipkart Plus) வாடிக்கையாளர்களுக்கான பிக் பில்லியன் டேஸ் விற்பனை தேதியை அறிவித்துள்ளது.

75 சதவீதம் தள்ளுபடியில் 4K TV: பிளிப்கார்ட்டில் விற்பனைக்காக உருவாக்கப்பட்ட மைக்ரோசைட்டின் படி, வாடிக்கையாளர்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ்களில் 80 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். நீங்கள் டிவி வாங்க விரும்பினால், அதுவும் 4K டிவிகளில் 75 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி விலையில் iPhone 15 மற்றும் 14: ஃப்ளிப்கார்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் iPhone 15 மற்றும் iPhone 14 ஆகிய போன்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, சாம்சங் (Samsung), ரெட்மி (Redmi), க்ஷியோமி (Xiaomi), ரியல்மி (Realme), ஒன்பிளஸ் (OnePlus) போன்ற பிராண்டுகளின் ஃபோன்களிலும் பெரும் தள்ளுபடியை வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான விலையில் கேஜட்டுகள்: EMI, வங்கி சலுகைகள், கேஷ்பேக், கூப்பன்கள் உள்ளிட்ட பிற ஆஃபர்களையும் வழங்க வாய்ப்புள்ளது. இது தவிர, லேப்டாப்கள், டேப்லெட்கள், இயர்பட்ஸ், ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்சுகள் போன்ற பல பொருட்களை ஃப்ளிப்கார்ட் குறைந்த விலையில் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃப்ளிப்கார்ட் பிளஸ் மெம்பர்ஷிப்பைப் பெறுவது எப்படி?:

  • ஃப்ளிப்கார்ட் பிளஸை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் கடந்த ஒரு ஆண்டில் 4 வெற்றிகரமான பரிவர்த்தனைகளைச் செய்திருக்க வேண்டும்.
  • அதுவே, கடந்த ஒரு ஆண்டில் 8 அல்லது அதற்குமேல் வெற்றிகரமான பணப் பரிமாற்றங்களைச் செய்திருந்தால் ஃப்ளிப்கார்ட் பிளஸ் பிரீமியம் மெம்பர்ஷிப்பை பெறமுடியும்.
  • அதன் பிறகு, ஃப்ளிப்கார்ட் பிளஸ் மற்றும் ஃப்ளிப்கார்ட் பிளஸ் பிரீமியம் மெம்பர்ஷிப் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கும் ஒவ்வொரு முறையும் 2x சூப்பர் காயின் (2x Super Coins) எனப்படும் பாய்ண்டுகளை பெறலாம்.

ஃப்ளிப்கார்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தேதி: ஃப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கான பிக் பில்லியன் டேஸ் விற்பனையானது, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி அன்று தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பெண்களே.. பயணத்தின்போது இவை உங்களுடன் இருந்தால் நீங்கள் 100% சேஃப்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.