ETV Bharat / business

பங்குசந்தை முதலீட்டில் உலகின் 4வது நாடாக உயர்ந்த இந்தியா.. ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளி சர்வதேச அளவில் தடம் பதித்தது.. - India Fourth Largest Stock Market

சர்வதேச அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்ததன் மூலம் உலகின் 4வது அதிக மதிப்பு கொண்ட பங்குசந்தையாக இந்தியா முன்னேறி உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஹாங்காங்கை பின்னுக்குத் தள்ளி இந்தியா இந்த வரலாற்று சாதனையை படைத்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 12:58 PM IST

Updated : Jan 23, 2024, 8:13 PM IST

டெல்லி : ஹாங்காங் பங்குசந்தையை முதல் முறையாக பின்னுக்குத் தள்ளி சர்வதேச அளவில் நான்காவது பெரிய பங்குசந்தையாக இந்தியா வளர்ந்து உள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தையின் மதிப்பு 4 புள்ளி 29 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ள நிலையில், தொடந்து முதலீடு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு 4 புள்ளீ 33 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ப்ளும்பெர்க் வெளியிட்ட தரவுகளின் படி, இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதிக்கு பின்னர் முதல் முறையாக 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து உள்ளது. தொடர் முதலீடு, வெளிநாடு முதலீட்டாளர்களின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பி இருப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தை வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகளவில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ள நிலையில், தற்போது அதிக பங்குகளை கொண்டு இந்தியா சர்வதேச அளவில் அதிக பங்கு மதிப்புகளை கொண்ட நான்காவது நாடாக உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பங்கு சந்தை முதலீட்டாளர்களின் தொடர் முதலீடுகள் காரணமாக கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய பங்குசந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி 17 முதல் 18 சதவீதம் வரை உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய பங்குசந்தை 3 அல்லது 4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்ததாக கூறப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஹாங்காங் பங்குசந்தையில் 32 முதல் 33 சதவீதம் வரை முதலீடுகள் குறைந்ததே இந்த திடீர் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 537.27 புள்ளிகள் உயர்ந்து 71,960.92 புள்ளிகளை எட்டி உள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட் ஆகியவை உயர்வுடன் இருக்கும் வேளையில் எஸ்பிஐ, இண்டஸ்இந்த், மாருதி சுசூகி, ஹெச்டிஎப்சி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை சரிவில் உள்ளன.

இதையும் படிங்க : ராமர் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்! கூட்ட நெரிசல்.. தள்ளுமுள்ளு!

Last Updated : Jan 23, 2024, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.