டெல்லி: இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக குளோபல் டேட்டா என்ற தரவு மற்றும் நிதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு 20.4 சதவீதமாக இருந்த பணமில்லா பரிவர்த்தனை முறை 2023 ஆம் ஆண்டில் 58.1 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவில் தான் அதிகளவிலான ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மூலம் பிலிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களில் பொருட்கள் நுகர்வு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரிடி பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இந்த வசதியில் யுபிஐ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மூலம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய பணப் பரிமாற்றத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மொபைல் மற்றும் டிஜிட்டல் பேமண்ட் வசதிகளில் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அதிகளவில் பணப் பரிவர்த்தனை செய்து முதல் இரு இடங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 2023 தரவுகளின் படி சீனா இரண்டில் மூன்று பங்கு கொடுப்பனவுகளை கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 2018ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இந்தியா குறிப்பிடத்தக்க வகையிலான அளவுகளை எட்டி உள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த வரிசையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் உள்ளன. பைனாசியல் சர்வீசஸ் கன்சியூமர் சர்வே என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, உலகளவில் மிகப் பெரிய இ-காமர்ஸ் சந்தையான சீனாவில் ஆன்லைன் பரிவர்த்தனை மதிப்பு 65 சதவீதத்திற்கும் அதிகமான மாற்று கட்டண தீர்வுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அமைப்பு என்பது கடந்த 2018 ஆம் அண்டை காட்டிலும் 2023ஆம் ஆண்டில் 53.4 சதவீதம் வரை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏர் இந்தியா உணவில் இரும்பு பிளேடு.. எப்படி வந்தது? - Blade in Air India Food