ETV Bharat / bharat

பெங்களூரு ஏர்போர்ட்டில் தொழிலாளி கொடூர கொலை.. திருமணத்தை மீறிய உறவு காரணமா? - Bengaluru airport murder - BENGALURU AIRPORT MURDER

worker stabbed to death at Bengaluru airport: பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சர்வதேச விமான நிலையம் (கோப்புப் படம்)
பெங்களூரு சர்வதேச விமான நிலையம் (கோப்புப் படம்) (credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 11:22 AM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் டிராலி இழுக்கும் தொழிலாளியாக இருந்து வந்தவர் ராமகிருஷ்ணப்பா (45). ராமகிருஷ்ணப்பாவுக்கு திருமணமாகி தேவனஹள்ளியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இவர் நேற்று மாலை 6:30 மணியளவில் வழக்கம்போல விமான நிலையத்தின் டெர்மினல்-1 பகுதியில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் ராமகிருஷ்ணப்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமகிருஷ்ணப்பாவின் கழுத்தில் பலமாக குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமகிருஷ்ணப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடனே சிஐஎஸ்எஃப் காவலர்கள் கத்தியால் குத்திய நபரை பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ராமகிருஷ்ணப்பாவை கொலை செய்தது ரமேஷ் என்பதும் திருமணத்தை மீறிய உறவால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராமகிருஷ்ணப்பாவின் உடல் பெங்களூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆரோவில் கடலில் மூழ்கி உ.பி., இளம்பெண் பலி.. நண்பனின் தாய், கெஸ்ட் அவுஸ் ஊழியர் மீது சந்தேகம்.. புதுச்சேரியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.