ETV Bharat / bharat

மோடியின் வாகன பேரணி: மறுத்த கோவை போலீஸ் - அனுமதி அளித்த உயர்நீதிமன்றம் - Police denied modi covai road show

கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணியில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இதற்கு எதிரான மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மோடியின் வாகன பேரணி
மோடியின் வாகன பேரணி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 4:26 PM IST

Updated : Apr 3, 2024, 3:36 PM IST

டெல்லி: வரும் மார்ச் 18ஆம் தேதி பிரதமர் மோடி கோவைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். சுற்றுப்பயணத்தின் இடையே பிரதமர் மோடி கோவை மாநகரில் வாகன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுவை பரிசீலனை செய்த பின்னர், வாகன பேரணிக்கு (Road Show) அனுமதி இல்லை என மறுத்து பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ்குமாருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல்துறை முக்கியமாக 5 காரணங்களை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. பிரதமர் நிகழ்வு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி, வடகோவை, கங்கா மருத்துவமனை உட்பட பல்வேறு முக்கிய இடங்கள் உள்ளன. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களும், காய்கறி சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்களும், இந்த சாலையை கடக்க முடியாதவாறு இடையூறு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அடிக்கடி ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கலை சந்திக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், 10ம் வகுப்பு தேர்வுகள் விரைவில் துவங்க உள்ளன. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் சந்தர்ப்பத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களது தேர்வுக்கு இடையூறாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் அவர்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருக்கும் நிலையில், 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெடி குண்டு செயலிழப்பு கருவிகளைக் கொண்டு சோதனை நடத்துவது என்பதும், சாலையின் இரு புறங்களில் மக்கள் நிற்கும் இடத்தில் ஒவ்வொரு தனி நபரிடமும் சோதனை மேற்கொள்வது என்பதும் சிரமமான விஷயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோவை மதரீதியான உணர்வு மிக்க நகரமாக இருக்கும் நிலையில் , இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் தேசிய புலனாய்வு முகமையின் கண்காணிப்பில் இருந்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது தவிர கோவை மாநகரில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது அரசியல் தலைவருக்கோ சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டது இல்லை எனவும் தெரிவித்துள்ள கோவை மாநகர காவல் துறையினர் சட்டம், ஒழுங்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிகழ்விற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று பிற்பகல் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் (SPG) அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் கோவை மாநகர காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நடைமுறையில் இருக்கும் பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள், எஸ்பிஜி அதிகாரிகளிடம் விரிவாக தெரிவித்தனர். இந்த ஆலோசனையின் போது பாஜக நிர்வாகிகளும் பங்கேற்றிருந்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாவட்டத் தலைவர் ரமேஷ், கேரளா, காஷ்மீர் போன்ற இடங்களில் கூட பேரணிக்கு அனுமதி கிடைத்ததாகவும், ஆனால் தமிழ்நாட்டில் அனுமதி அளிக்காதது ஏன் என காவல்துறையிடம் கேட்டதாக கூறினார். அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தாங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். இதனிடையே பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேசன் அமர்வு முன்பு இன்றே விசாரணைக்கு வந்தது.

பிரதமரின் சாலைப் பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், மாலை 4 மணிக்குத் தான் வாகன பேரணி என்பதால் மாணவர்களுக்கு தொந்தரவாக இருக்காது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தேர்தல் பத்திரம்: ரகசியமாக நன்கொடை வழங்கியதா ரிலையன்ஸ்? குவிக் சப்ளை நிறுவனம் யாருடையது?

Last Updated : Apr 3, 2024, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.