கொழும்பு: இலங்கையின் 10வது அதிபருக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று( செப்.21) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது. அதிபர் தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில் சுயேட்சை வேட்பாளராக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே (75), தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுரா குமாரா டிசாநாயகே (56) மற்றும் சமாகி ஜனா பாலவேகயா கட்சியின் சஜித் பிரேமதசா (57) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தலில் சுமார் 75 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தேர்தலில் வாக்குகள் அடங்கிய பெட்டிகளை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 6 மணியிலிருந்து வாக்குகள் எண்ணும் பணியானது நடைபெற்று வருகின்றன.
VIDEO | Sri Lanka Polls 2024: Election officials bring ballot papers to a counting centre at Colombo's Royal College amid heavy security deployment.
— Press Trust of India (@PTI_News) September 21, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/xQFTbAaiCw
வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை எப்போது?