உத்தரகாசி : முதல் கட்ட மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 102 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், உத்தரகாண்ட் மாநிலத்தின் மிக உயரம் குறைந்த பெண் பிரியங்கா உத்தரகாசி மக்களவை தொகுதியில் தனது வாக்கினை செலுத்தினார். 27 வயதான பிரியங்கா, 64 சென்டி மீட்டர் உயரமே உள்ளவர்.
உத்தரகாசி மாவட்டம் பரஹட் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. தனது தாயார் ரமி தேவியுடன் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த பிரியங்கா தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அவருக்கு வாக்குப்பதிவு மையத்தில் இருந்த காவலர்கள், தேர்தல் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதகா உலகின் மிகவும் உயரம் குறைவான பெண் மற்றும் கின்னஸ் சாதனை படைத்தவரான ஜோதி ஆம்கே மகாராஷ்டிராவில் தனது வாக்கைச் செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார். நாக்பூர் தொகுதியை சேர்ந்த உலகின் மிகவும் உயரம் குறைவான பெண் என கின்னஸ் சாதனை படைத்த ஜோதி ஆம்கே தனது வாக்கைப் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: மக்களவை தேர்தல் விறுவிறுப்பு: ஜனநாயக கடமை ஆற்றிய கின்னஸ் சாதனை பெண் ஜோதி ஆம்கே! - Lok Sabha Election 2024 Phase 1