ETV Bharat / bharat

"விரைவில் பொது சிவில் சட்டம் அமல்"- உத்தரகாண்ட் முதலமைச்சர் உறுதி! - Uniform Civil Code

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 3:03 PM IST

Uttarakhand Uniform Civil Code: உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code - UCC) அமல்படுத்துவதற்கு ஏதுவான அனைத்து சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய சிறப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளோம். 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தோம்.

அந்த வாக்குறுதியை நாங்கள் காப்பாற்றி உள்ளோம். பொது சிவில் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து உள்ளார். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. துறை ரீதியிலான குழு அமைக்கப்பட்டு மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஏதுவான அனைத்து சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

விரைவில் உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். சட்டத்தை அமல்படுத்த தடையாக உள்ள அனைத்து சிரமங்கள் மற்றும் சவால்கள் ஆராயப்பட்டு வருகின்றன. நாட்டில் அவரவர் வசதிக்காக சட்டத்தை இயற்றியுள்ளனர். அனைவருக்கும் நல்ல சட்டம், பெண்களுக்கு அதிகாரம், முதியோர்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் எதிர்காலம் கருதி, அனைவரின் வசதிக்காகவும் பொது சிவில் சட்டம் இயற்றியுள்ளோம் என்று தெரிவித்தார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உத்தரகாண்ட் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டது. மேலும் நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. உத்தராகண்ட் சட்டப்பேரவையில் மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் 2024 மசோதா திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, லிவ்-இன் உறவுகள் ஆகியவற்றை மட்டுமே குறிப்பதாகவும், உத்தராகண்ட் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து சாதி, மதத்தினருக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

அதேநேரம், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் இந்த மசோதாவின் வரம்பிற்குள் வரமாட்டார்கள் என்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க : மக்களவை தேர்தல்: காங்கிரஸ் 4வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! - Lok Sabha Congress Candidates List

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.