ETV Bharat / bharat

தங்க பிஸ்கட் கேள்விப்பட்டிருப்பீங்க; வெள்ளி பிஸ்கட் கடத்தலை கேள்விப்பட்டிருக்கீங்களா? ராஜஸ்தானில் சம்பவம்! - Silver biscuit smuggling

Silver biscuits seizure in Rajasthan: ராஜஸ்தான் மாநிலம் மாவல் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி பகுதியில் குஜராத் மாநிலத்திற்கு வெள்ளி கட்டிகளை கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது தொடர்பான கோப்புப்படம்
கைது தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 9:52 PM IST

சிரோஹி (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில எல்லை பகுதியில் உள்ள மாவல் சோதனைச் சாவடியில் அபு ரோடு ரிக்கோ காவல் நிலைய அதிகாரி சீதாராம் தலைமையிலான போலீசார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். மேலும், காரில் இருந்த இருவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் சென்ற வாகனத்தில் சோதனை மேற்கொண்டபோது, இருக்கைகளுக்கு அடியில் வெள்ளிக் கட்டிகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும், கடத்த முயன்ற 52 கிலோ வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 50 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி அவர்களது காரில் இருந்து 3.5 லட்சம் ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டதைச் சேர்ந்த மீட் பட்டேல் மற்றும் ஹிதேஷ் பட்டேல் என்பதும், அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து, குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதிக்கு வெள்ளி கட்டிகளை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விசாகப்பட்டினத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் ஏசி பெட்டிகளில் தீ விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.