ETV Bharat / bharat

உத்தரகாண்ட், கர்நாடகாவில் அடுத்தடுத்து கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு! - Uttarakhand Accident

Uttarakhand Accident: உத்தரகாண்ட் மாநிலத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது லாரி மோது ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கர்நாடகா மாநிலத்தில் கார் மீது ட்ரக் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Crashed car, bus
விபத்துள்ளான கார், பேருந்து (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By PTI

Published : May 26, 2024, 8:19 PM IST

உத்தரகாண்ட்/கர்நாடகா: உத்தரகாண்ட் மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் சாலையோர உணவகம் முன் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் மீது, சல்லிக் கற்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் அமர்ந்திருந்த 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து ஷாஜகான்பூர் எஸ்.பி அசோக் குமார் மீனா கூறுகையில், “பூர்ணகிரி செல்லும் பக்தர்கள் இந்த பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள கம்லாபூர் காவல்நிலைய பகுதியைச் சேர்ந்தவர்கள். இரவு 11 மணியளவில் குதார் பிஎஸ் பகுதியில் பேருந்தை நிறுத்தி, சில பக்தர்கள் தாபாவில் உணவருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார் மீது ட்ரக் மோதி விபத்து: கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கார் மீது டிரக் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கார் ஓட்டுநரைத் தவிர காரில் பயணித்த அனைவரும் சிக்கபல்லாபுரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்றும், இவர்கள் மங்களூருவில் இருந்து திரும்பி வரும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ராஜ்கோட் விளையாட்டு வளாகத்தில் பயங்கர தீ விபத்து; குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழப்பு! - Rajkot Fire Accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.