ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து: 15 பேர் உயிரிழப்பு; 60 பயணிகள் காயம் - கோர விபத்து நிகழ்ந்தது எப்படி? - west bengal train accident - WEST BENGAL TRAIN ACCIDENT

Trains Collide: மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்ததாகவும், 60 பயணிகள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில் விபத்து நிகழ்ந்த நியூ ஜபைல்குரி பகுதி
ரயில் விபத்து நிகழ்ந்த நியூ ஜபைல்குரி பகுதி (Image Credit - ETV Bharat Bengal)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 10:44 AM IST

Updated : Jun 17, 2024, 1:10 PM IST

டார்ஜிலிங் (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்துக்குட்பட்ட நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் (KANCHANJUNGHA EXPRESS TRAIN) மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இன்று காலை 8.45 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், சரக்கு ரயில் மற்றும் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டதில் பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர். 60 பயணிகள் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் கொல்கத்தா வடக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ரயில்வே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து நிகழ்ந்தது எப்படி?: அஸ்ஸாம் மாநிலம், சிலிகாரில் இருந்து மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் சில்தாக் ரயில் நிலையம் நோக்கி கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் பயணித்துக் கொண்டிருந்தது. இன்று காலை 8.45 மணியளவில், டார்ஜிலிங் மாவட்டம், நியூ ஜல்பைகுரி பகுதிக்குட்பட்ட ரங்கபானி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டும், அவற்றில் சில பெட்டிகள் அந்தரத்தில் தொங்கியப்படியும் இருந்தன.

பயணிகள் விரைவு ரயில் தடத்தில், சிக்னலை கவனிக்காமல் சரக்கு ரயில் கடந்து சென்றதே விபத்துக்கான காரணம் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் வருகை: விபத்து குறித்து அறிந்ததும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியிலிருந்து டார்ஜிலிங் விரைந்தார். அங்கிருந்து அவர், விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு: இதனிடையே, மேற்கு வங்க மாநில ரயில் விபத்தில் சிக்கியவர்கள் குறித்த தகவல்களை அறிய அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரயில் விபத்து அவசர உதவி எண்கள்
ரயில் விபத்து அவசர உதவி எண்கள் (Image Credit - Ministry of Railway)

இதையும் படிங்க: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் மாயம்! தண்ணீரில் தத்தளித்த 13 பேர் மீட்பு!

Last Updated : Jun 17, 2024, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.