ETV Bharat / bharat

12 வயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகள்.. அதிர்ச்சி காரணம்.. மிரள வைக்கும் கலாச்சாரம்! - teenage pregnancy village - TEENAGE PREGNANCY VILLAGE

teenage pregnancy village: ஜார்கண்டின் குந்தி பழங்குடியின பகுதி கிராமங்களில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அதிகமானோர் கருவுற்று பிரசவிப்பதாக தெரிய வந்துள்ளது.

file pic
File picture (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 7:45 PM IST

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் குந்தி பழங்குடியினர் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்கள் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டாவின் தொகுதிக்குட்பட்ட பகுதியைச் சார்ந்தவையாக உள்ளன.

இந்த நிலையில், இங்குள்ள மரங்காடா, சிச்சிகிடா, கூடா, சர்வாடா, லாண்டப், போசியா, டெஹ்கேலா ஆகிய கிராமங்களில் வசிக்கும் குந்தி பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான சிறுமிகள் கர்ப்பமடைந்து குழந்தைகளைப் பெற்றெடுத்து வருவதாக அதிர்ச்சி ரிப்போர்ட் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆய்வில் இறங்கிய ஈடிவி பாரத், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் இருந்த பதிவேடுகள் மூலமாக இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளது. அதன்படி, மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த 12 முதல் 16 வயது வரையிலான சிறுமிகள் 75 முதல் 80 பேர் கடந்த மூன்றே மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் பணியாற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் நாகேஷ்வர் மஞ்சி கூறும்போது, இந்த பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடப்பதாகவும், குறிப்பாக மரங்காடா, சிச்சிகிடா, கூடா, சர்வாடா, லாண்டப், போசியா, டெஹ்கேலா போன்ற ஓபியத்தால் அடிமையான கிராமங்களில் பெரும்பாலான வழக்குகள் பதிவாகுவதாக தெரிவித்தார்.

'ஓபியம்' என்பது கஞ்சாவைப் போல அப்பகுதியில் எளிதில் கிடைக்கக்கூடிய போதைச் செடியாகும். மேலும், இப்பகுதியில் உள்ள பழங்குடியின சிறுமிகள் கர்ப்பமாவதற்கு இரு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, பழங்குடியினரின் 'துக்கு' என்கிற கலாச்சாரப்படி, சிறுமிகள் அவர்களது வயதில் உள்ள ஆண்களுடன் திருமணம் செய்து கொள்ளாமல் உறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றொரு காரணம், போதையூட்டும் ஓபியத்துக்கு அடிமையாகி, தன்னிலை மறந்து உறவு கொள்வதனாலும் சிறுமிகள் கர்ப்பம் அடைகின்றனர்.

மேலும், இங்குள்ள சிறார்கள் பொருளாதாரத் தேவைக்காக ஓபியம் வயல்களில் வேலை செய்கிறார்கள். கூடவே ஓபிய போதைக்கு அடிமையாகுவதால், பள்ளிக்குச் செல்லாமல் கல்வியறிவு இல்லாமல் போய்விடுகிறது. அத்துடன், இந்த கிராமங்களில் மதுபானமும் பிற போதைப் பொருட்களும் மிக எளிதாக கிடைக்கும் என்கிறார் அறுவை சிகிச்சை நிபுணர் நாகேஷ்வர் மஞ்சி.

மேலும், இப்பகுதியில் குழந்தைகள் நலக்குழு போன்ற குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தாலும், 'துக்கு' கலாச்சாரத்தால் டீனேஜ் கர்ப்பத்தை தடுப்பதில் சிக்கலாக உள்ளது என்கின்றனர். இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு அதிகாரி தனுஸ்ரீ ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில், இந்த பகுதிகளில் போக்சோ சட்டம் அப்பட்டமாக மீறப்படுகிறது என்றார்.

தொடர்ந்து பேசியவர், பாலியல் அத்துமீறலுக்குள்ளாகும் சிறுமிகளை எங்களது குழு அடையாளம் கண்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் என்றார். மேலும், சிறார் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து சட்டத்தின்படி தண்டிக்கப்படுவதையும் எங்கள் குழு உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார்.

பொதுவாக, உள்ளூர் அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மாவட்ட அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஈடிவி பாரத் ஊடகத்திடம் ராஞ்சி துணை மாவட்ட ஆட்சியர் ஷியாம் நாராயண் ராம் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: எது 400 இடங்களா? மொத்த சீட்டும் எங்களுக்குத்தான்.. அடித்துச் சொல்லும் ஜார்கண்ட் சிஎம் சம்பய் சோரன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.