ETV Bharat / bharat

இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன? உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன? - EVM VVPAT Case

இவிஎம் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் தனித் தனி மைக்ரோகன்ட்ரோலர்ஸ் கொண்டது என்று, ஒரு முறை மட்டுமே அதை புரோகிராம் செய்ய முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 7:26 PM IST

டெல்லி : மின்னணு வாக்குப்பதிவு (இவிஎம்) இயந்திம் மற்றும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரமான விவிபாட்டில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி எவ்வாறு இயந்திரங்கள் பணியாற்றுகிறது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

வாக்குப்பதிவு மையத்தில் வைக்கப்படும் கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் அதாவது வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரங்களில் தனித்தனியாக மைக்ரோகண்ட்ரோலர்கள் உள்ளன. அதற்கான மெமரி புரோகிராம் செய்யப்பட்டதும் அழிக்கப்படுவதால் அதில் மனித தலையீடுகளுக்கு வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவிஎம் மற்றும் விவிபாட் இயந்திரங்களில் பொருத்தப்படும் மைக்ரோகன்ட்ரோலர்கள் ஒரு முறை புரோகிராம் செய்யப்பட்டது என்பதால் அதை மாற்றவோ அல்லது மனிதர்களால் அணுகவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. நாட்டில் எத்தனை சிம்பிள் லோடிங் இயந்திரம் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஎச்இஎல்) ஆகிய இரண்டு நிறுவனங்கள் இவிஎம் இயந்திரங்களை வழங்கி வருவதாகவும் இதில் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் ஆயிரத்து 904 இயந்திரங்களும், பிஎச்இஎல் நிறுவனத்திடம் 3 ஆயிரத்து 154 இயந்திரங்களும் இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து தேர்தலுக்கு பின்னர் எத்தனை நாட்களுக்கு இவிஎம் இயந்திரங்கள் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தேர்தல் முடிவுகளை எதிர்த்து மனுத் தாக்கல் செய்ய உள்ள 45 நாட்கள் இவிஎம் இயந்திரங்கள் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

46வது நாள் தலைமை தேர்தல் அதிகாரி, உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்களுக்கு கடிதம் எழுதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்று கேட்பார் என்றும் அது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர்கள் வழங்கும் பதிலை பொறுத்து இவிஎம் இயந்திரங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஒருவேளை குறிப்பிட்ட தேர்தல் மையத்தில் பதிவான வாக்குகள் தொடர்பாக புகார்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட இவிஎம் இயந்திரங்கள் மட்டும் தனியாக சீலிடப்பட்ட அறையில் வைத்து பாதுகாக்கப்படும் என்றும் வழக்கின் தீர்ப்பு வெளிவரும் வரை அந்த இயந்திரங்கள் பத்திரமாக சேமிக்கப்படும் என்றும் அந்த இயந்திரங்களை யாரும் அணுக முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட் ஆகியவற்றுடன் ஒன்றாக விவிபாட் இயந்திரம் பாதுகாப்பு அறையில் வைக்கப்படுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், கன்ட்ரோல் யுனிட் மிகவும் முக்கியமானது என்பதால் இவிஎம் இயந்திரங்களின் முதல்-நிலை சரிபார்ப்புக்குபின் பிங்க் நிற முத்திரையுடன் சீல் செய்யப்படும்.

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபாட் இயந்திரம் ஆகிய மூன்றும் சீல் வைக்கப்பட்டு ஒரு யூனிட்டாக சீலிடப்பட்ட அறையில் ஒன்றாக சேமிக்கப்படும் என்றும் வாக்குப்பதிவுக்குப் பிறகு, இயந்திரங்களில் பச்சை காகித முத்திரை பயன்படுத்தப்பட்டு சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்தை அடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தட்டா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒத்திவைத்தது.

இதையும் படிங்க : ராமகிருஷ்ணா மிஷன் தலைவராக கவுதமனந்தாஜி மகாராஜ் தேர்வு! பிரதமர் மோடி வாழ்த்து! - Ramakrishna Math New President

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.