ETV Bharat / bharat

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: முன்னாள் முதலமைசர் எடியூரப்பாவுக்கு பிணையில்லா பிடிவாரண்டு! - Yediyurappa arrest warrant

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத வகையில் பிடிவாரண்டு பிறப்பித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
BS Yediyurappa (ANI Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 5:01 PM IST

Updated : Jun 13, 2024, 5:34 PM IST

பெங்களூரு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத வகையில் பிடிவாரண்டு பிறப்பித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், எடியூரப்பா முன்ஜாமீன் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நாளை (ஜூன்.14) நடைபெற உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரில் சதாசிவ நகர் போலீசார் எடியூரப்பா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை மாநில அரசு சிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சிஐடி போலீசார், எடியூரப்பாவுக்கு சம்மன்ன் அனுப்பினர். ஆனால் எடியூரப்பா விசாரணைக்கு ஆஜராகவில்லை. தொடர்ந்து இரண்டு முறை சிஐடி போலீசார் சம்மன் அனுப்பியும் எடியூரப்பா விசாரணைக்கு ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜராக எடியூரப்பா அவகாசம் கோரி இருந்தார். இந்நிலையில், எடியூரப்பாவுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க உத்தரவிடக் கோரி பெங்களூருவில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

முன்னதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் முன் ஜாமீன் வழங்கக் கோரி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத் தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை (ஜூன்.14) நடைபெற உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, திருட்டு வழக்கில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி தாயும் பெண்ணும் தன்னை சந்திக்க நீண்ட நாட்களாக முயற்சித்ததாகவும், காவல் ஆணையரை அழைத்து அவர்கள் குறித்து கூறி சுமூக தீர்வு காணும் படி தான் அறிவுறுத்திய நிலையில் தனக்கு எதிராக இருவரும் புகார் அளித்துள்ளதாகவும் எடியூரப்பா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "நீட் வினாத் தாள் கசிந்ததாக ஆதாரமில்லை" - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்! - union minister Dharmendra Pradhan

Last Updated : Jun 13, 2024, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.