புதுடெல்லி: இளைஞர்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் ஐந்தாவது கட்டமாக, மத்திய அரசு, இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 500 சிறந்த நிறுவனங்களில் ஆண்டுக்கு 20 லட்சம் இளைஞர்கள் வீதம், ஐந்தாண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓராண்டு கால இப்பயிற்சியின் மூலம் நவீன கால வணிக சூழல், பல்வேறு பணிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த அனுபவத்தை அவர்கள் பெற இயலும். பயிற்சி காலத்தில் மாதத்துக்கு 5000 ரூபாயும், ஒருமுறை ஊக்கத்தொகையாக 6000 ரூபாயும் அளிக்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சி திட்ட செலவில் 10 சதவீதத்தை பெருநிறுவனங்கள் தங்களின் கார்ப்பரேட் சமூக பங்களிப்பு ( CSR) திட்டத்தின்கீழ் வழங்கும் என்று மத்திய பட்ஜெட் தெரிவிக்கப்பட்டுள்ளது,.
பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்: வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக சிறப்பு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார். தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பெண்களுக்கான தங்கும் விடுதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களான Crech கள் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதல் மாசம் டபுள் சம்பளம்; இளைஞர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்!