சீகர்/ராஜஸ்தான்: சீகர் மாவட்டம் லக்ஷ்மங்கரில் இன்று (அக்டோபர் 29) பிற்பகல் வேகமாகச் சென்ற பேருந்து ஒன்று பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 29 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் லக்ஷ்மங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து லக்ஷ்மங்கர் (Laxmangarh) காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராம்தேவ் சிங் கூறுகையில், "சாலாசரிலிருந்து நவல்கர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, லக்ஷ்மங்கரில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கூடுதலாக 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 33 பேர் படுகாயமடைந்தனர்," என்று தெரிவித்தார்.
தற்போது காவல்துறை தரப்பில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 29 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து காவல்துறை விசாரணை:
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு லக்ஷ்மங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் பெருமளவு பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லக்ஷ்மங்கர் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
सीकर जिले के लक्ष्मणगढ़ क्षेत्र में बस दुर्घटना के कारण हुई जनहानि दुःखद खबर है,ईश्वर दिवगंत जनों की आत्मा को शांति प्रदान करें व घायलों को शीघ्र स्वास्थ्य लाभ प्रदान करने !
— HANUMAN BENIWAL (@hanumanbeniwal) October 29, 2024
இந்த விபத்து குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அனுமன் பெனிவால் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சீகர் மாவட்டம் லக்ஷ்மங்கரில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி: படுகாயமடைந்தவர்களுக்கு லக்ஷ்மங்கர் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சீகர் (Sikar) கல்யாண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க |
அரசியல் தலைவர்கள் இரங்கல்:
இந்த விபத்து குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Sikar, Rajasthan. The injured would be given Rs. 50,000. https://t.co/XJgKUGzYHd
— PMO India (@PMOIndia) October 29, 2024
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
लक्ष्मणगढ़ में भीषण सड़क दुर्घटना में कई लोगों की मृत्यु का हृदयविदारक समाचार सुनकर आहत हूं। दु:खद एवं दुर्भाग्यपूर्ण हादसे में अपनों को खोने वालों के प्रति मेरी गहरी संवेदना है।
— Govind Singh Dotasra (@GovindDotasra) October 29, 2024
दुर्घटना संज्ञान में आते ही घायलों के त्वरित उपचार एवं हर संभव सहायता के लिए स्थानीय प्रशासनिक…
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் டோடாஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில், "லக்ஷ்மங்கரில் நடந்த பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களது குடும்பத்தினர் இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
सीकर जिले के लक्ष्मणगढ़ में बस के पुलिया से टकराने से हुए हादसे में कई लोगों के जान गंवाने एवं घायल होने का दुखद समाचार मिला। मैं ईश्वर से दिवंगत आत्माओं की शांति और हादसे में घायलों के शीघ्र स्वास्थ्य लाभ की कामना करता हूं। #Sikar #Rajasthan
— Rajendra Rathore (@Rajendra4BJP) October 29, 2024
பாஜக தலைவரும், சூரு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜேந்திர ரத்தோர் தனது எக்ஸ் பக்கத்தில், "சீகர் மாவட்டம் லக்ஷ்மங்கரில் நடந்த பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை வேண்டுக்கொள்கிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.