ETV Bharat / bharat

கேரள பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா! ஆயிரக்கணக்கான பெண்கள் சாமி தரிசனம்!

Attukal Bhagavathy temple: கேரளா பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடினர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 5:13 PM IST

Updated : Feb 25, 2024, 6:28 PM IST

Etv Bharat
Etv Bharat

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் ஆற்றுகால் பகுதியில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோயில் அமைந்து உள்ளது. பகவதி அம்மன் கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து வழிபடுவது விஷேசம். கடந்த 2009ஆம் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் ஏறத்தாழ 2 கோடியே 50 லட்சம் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

இந்நிலையில், இன்று (பிப்.25) பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 10.40 மணி அளவில் கோயில் பகுதியில் உள்ள பண்டார அடுப்பில் உள்ள பாணையில் நெருப்பு ஏற்றி வைத்து கோயில் நிர்வாகத்தினர் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து, பொங்கல் விழாவில் கலந்து கொண்டு அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பொங்கல் வைத்து சாமிக்கு படையல் போட்டனர். ஏறத்தாழ 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் இங்கு விரைவது வழக்கம்.

பெண்களின் சபரிமலை எனக் கூறப்படும் அட்டுக்கல் பகவதி அம்மன் கோயிலில் கடந்த வியாழக்கிழமை முதலே பல்வேறு ஊர்களில் இருந்து பெண்கள் விரைந்து கோலாகல நிகழ்ச்சியில் ஈடுபடத் தொடங்கினர்.

இதையும் படிங்க : பாஜகவில் இணைந்த பகுஜான் எம்.பி.! அருணாசல பிரதேசத்தில் காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்! என்ன காரணம்?

Last Updated : Feb 25, 2024, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.