குஜராத் : குஜராத் மாநிலம், மெஹ்சனா மாவட்டம், காடி என்ற இடத்தில் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான நிலத்தில் தொட்டி அமைப்பதற்காக 10 பேர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மண்சுவர் இடிந்து விழுந்ததில் 10 பேரும் மண்ணுக்குள் புதைந்தனர்.
இந்த தகவல் உடனடியாக மாவட்ட தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ஜேசிபி உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்தவர்களை இறந்த நிலையில் மீட்டனர். இதில், 10 பேர் மண்ணுக்குள் சிக்கி இருந்த நிலையில், ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க : பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: சதி வேலை காரணமா என என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை
இதுகுறித்து உயிருடன் மீட்கப்பட்ட நபர் கூறுகையில், "இரவு 12 மணி போல இந்த விபத்து நடைபெற்றது. இந்த பணியில் மொத்தம் 10 பேர் வேலை செய்து கொண்டிருந்தோம். அப்போது எதிர்பாராதவிதமாக மண்சுவர் இடிந்து விழுந்ததில், நான் உட்பட 10 பேரும் மண்ணுக்குள் புதைந்தோம். நான் என் கண்கள் வரை மண்ணுக்குள் புதைந்தேன். இந்த விபத்தில் உயிர் பிழைத்தது நான் மட்டும் தான்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்