ETV Bharat / bharat

நடுநடுங்கும் தலைநகர் டெல்லி; வெடிகுண்டு மிரட்டல்களால் பதற்றத்தில் பள்ளிகள்..! - DELHI BOMB THREATS

தலைநகர் டெல்லியில் இன்று மேலும் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

வெடிகுண்டு சோதனை (கோப்புப்படம்)
வெடிகுண்டு சோதனை (கோப்புப்படம்) (credit - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2024, 10:13 AM IST

Updated : Dec 14, 2024, 10:19 AM IST

புது டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு அண்மை காலமாக மின்னஞ்சல்கள் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மாணவர்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று (டிச.14) டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு இதேபோன்ற மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

'எந்த மனிதனும் தப்ப முடியாது'

அந்த வகையில், இன்று டிபிஎஸ் ஆர்கே புரம், ரியான் இன்டர்நேஷனல் பள்ளி, வசந்த் குஞ்ச் உள்ளிட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. இன்று காலை 6.12 மணியளவில் ''childrenofallah@outlook.com'' முகவரியில் இருந்து வந்த மிரட்டல் செய்தியில், '' அல்லாவின் தண்டனையை எதிர்க்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை அல்லா காண்கிறான். ஆனால் அவை பயனற்றவை. அல்லாவின் தீர்ப்பில் இருந்து எந்த மனிதனும் தப்ப முடியாது. அல்லாவை எதிர்க்கும் அனைவரையும் எதிரிகள் என்று முகமது நபி உலகுக்கு அறிவிக்கிறார். அல்லாவின் புனிதச் சுடரில் குழந்தைகளை எரிக்க முஹம்மது நபி அனுமதித்துள்ளார். ஆனால், நீங்கள் எங்களை தடுக்க முயற்சிப்பதை காண்கிறோம். அது உங்களால் முடியாது. சனிக்கிழமையன்று மாணவர்கள் இல்லாத கட்டிடங்கள் இடிக்கப்படும். எங்கள் வெடிகுண்டு உடைகள் நபிகள் நாயகத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவை. அவர்கள் தங்கள் இலக்கை இழக்க மாட்டார்கள். எங்கள் குழந்தைகள் அல்லாவின் துணிச்சலான வேலைக்காரர்கள் "என்று மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதுவும் கிடைக்கவில்லை

வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்ததையடுத்து பள்ளிகள் டெல்லி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளன. தகவல் கிடைத்ததும் டெல்லி போலீசார், வெடிகுண்டு கண்டறிதல் குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் இதுகுறித்து தென்கிழக்கு டெல்லி காவல்துறை துணை ஆணையர் (DCP) ரவிக்குமார் சிங் கூறுகையில், டெல்லி முழுவதும் 30 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளது. போலி மிரட்டல்கள் குறித்த விசாரணையில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட இ-மெயில்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்தவை என்பது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போராடும் விவசாயிகள் மீது பலபிரயோகம் கூடாது...மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

மேலும், தகவல் கிடைத்ததும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் அந்த இடங்களில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை கவலையடைய செய்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே எங்களது முதல் பணியாகும். இதுவரை எந்த ஒரு பள்ளியிலும் வெடிபொருட்களோ, அபாயகரமான பொருட்களோ கண்டுபிடிக்கப்படவில்லை.

30,000 அமெரிக்க டாலர்கள்

இதுவரை டெல்லியில் 40 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. குறிப்பாக ஒரு மெயிலில் வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருக்க 30,000 அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என்று டிமாண்ட் செய்யப்பட்டிருந்தது. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்'' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் தொடரும் இந்த சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், '' குழந்தைகள் இதனால் உளவியல் மற்றும் கல்வி ரீதியாக பாதிக்கப்படுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் அவர்களின் படிப்பு மற்றும் நல்வாழ்வை சீர்குலைக்கும்'' என்றார்.

Last Updated : Dec 14, 2024, 10:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.