டெல்லி: தமிழ்நாடு, பீகார், மேற்குவங்கம், மத்தியப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
எம்எல்ஏக்கள் மரணம், ராஜினாமா மற்றும் பிற கட்சிகளில் இணைந்தது உள்ளிட்ட பல காரணங்களால் காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி, ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா, மணிக்தலா, ரூபாலி, அமர்வாரா, பத்ரிநாத் மற்றும் மங்களூர், ஜலந்தர் மேற்கு, டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகார்க் ஆகிய 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்குத் துவங்கி நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
தற்போது காலை 11 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் 29.97% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலை 11 மணி நிலவரம்:
- பீகாரில் உள்ள ரூபாலி தொகுதியில் 11 மணி நிலவரப்படி 18.48 வாக்குகள் பதிவு
- மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்வாரா தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 25% வாக்குகள் பதிவு
- தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் 11 மணி நிலவரப்படி 29.97% வாக்குகள் பதிவு
- உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர் தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி 21.20% வாக்குகள் பதிவு
- பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி, 23.04% வாக்குகள் பதிவு
- ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகார்க் ஆகிய தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி, 32% வாக்குகள் பதிவு
- மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா, மணிக்தலா ஆகிய தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி, 24.25% வாக்குகள் பதிவு
இந்தயா கூட்டணியா? அல்லது என்டிஏ கூட்டணியா என விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த இடைத்தேர்தலில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.