அல்மோரா: உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் இன்று பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அல்மோராவில் உள்ள மார்ச்சுலா என்ற இடத்தில் இருந்து குமாவோனுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேருந்து குமாவோன் அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காவல்துறை தெரிவிக்கையில், சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் வந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் 7 பயணிகள் இறந்துள்ளனர். பயணிகள் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "எங்கள் தந்தை கொலையில் சம்பந்தப்பட்ட நளினியை கட்டி அணைத்தவர் தான் பிரியங்கா" - ராகுல் காந்தி!
இந்நிலையில், விபத்து குறித்து இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, '' "அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலாவில் நடந்த பேருந்து விபத்து துரதிர்ஷ்டமானது. இந்த விபத்தில், பயணிகள் உயிரிழந்ததான செய்தி வருத்தமாக உள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நிர்வாகத்துடன் மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் (SDRF) காயமடைந்தவர்களை வெளியேற்றி, அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல விரைவாக செயல்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், பலத்த காயமடைந்த பயணிகளை விமானத்தில் ஏற்றிச் செல்லவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன'' என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்