பரபன்கி : உத்தர பிரதேச மாநிலம் லக்னோவுக்கு பள்ளி மாணவர்களுடன் பேருந்து சுற்றுலா சென்று உள்ளது. லக்னோவில் இருந்து பரபன்கி நோக்கி பேருந்து திரும்பிக் கொண்டு இருந்த நிலையில், திடீரென விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோர விபத்தில் பள்ளிப் பேருந்தில் பயணித்த 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 10 மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிக வேகம் காரணமாக பேருந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதேநேரம் விபத்துக்கான உண்மையான காரணம் என்ன, பேருந்தில் மொத்தம் எத்தனை பேர் பயணித்தனர் உள்ளிட்ட கேள்விகளுக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் சுற்றுலா சென்ற பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாண்வர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : துருக்கியில் இரவு நேர கேளிக்கை விடுதியில் தீ விபத்து - 25 பேர் பலி! - Turkey Night Club Fire