டெல்லி: நீட் தேர்வில் வழங்கப்பட்ட ஓஎம்ஆர் தாள்களை பெறுவது தொடர்பாக தனியார் பயிற்சி மையம் மற்றும் மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போடு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வர்கள் தங்களது ஓஎம்ஆர் தாள்கள் கிடைக்கப் பெறவில்லை என்று மனுதாக்கல் செய்து உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து பதிலளித்த நீட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாணவர்களின் ஓஎம்ஆர் தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் மாணவர்களின் ஓஎம்ஆர் தாள்களை தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, ஓஎம்ஆர் தாள்கள் தொடர்பாக மாணவர்கள் புகார்களை எழுப்ப கால அவகாசம் ஏதேனும் இருக்கிறதா என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, உரிய பதில் அளிப்பதாக தேசிய தேர்வு முகமை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை அடுத்து, ஓஎம்ஆர் தாள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்க கால அவகாசம் ஏதேனும் உண்ட என தேசிய தேர்வு முகமை பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் வழங்க உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டீஸ்களுடன் சேர்த்து புதிதாக பிறக்கப்பட்ட நோட்டீஸ்க்கும் ஜூலை 8 ஆம் தேதி பதிலளிக்கக் கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்: ஆன்மீக யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்! திட்டம் என்ன? - Rahul Gandhi