ETV Bharat / bharat

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி? காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் தீர்மானம் என்ன? - Rahul Gandhi

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்து காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Etv Bharat
CONGRESS WORKING COMMITTEE MEETING (ANI Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 6:34 PM IST

டெல்லி: 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

அதேநேரம் பாஜக தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி 2வது பெரிய கட்சியாகவும், சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றி 3வது பெரிய கட்சியாகவும் உள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த எம்பிக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிலையில் செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மேலும், சமூக நீதி, ஜனநாயகம் காக்க வாக்களித்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் செயற் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், "மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்த இடங்களில் விரைவில் ஆய்வு நடத்தப்படும். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க கோரி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து விரைவில் முடிவு எடுத்து ராகுல் காந்தி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று கேசி வேணுகோபால் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள் நிதி சேமிப்பின் வாழ்வாதாரம் மார்கதர்ஷி சிட்பண்ட்ஸ்! - MARGADARSHI CHIT FUNDS

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.