ஹைதராபாத்: மகிழ்ச்சியான சங்கராந்தி பண்டிகை மற்றும் பரவசமான புத்தாண்டை முன்னிட்டு, ராமோஜி திரைப்பட நகரம் டிசம்பர் 19 முதல் ஜனவரி 19 வரை கண்கவர் குளிர்கால விழாவிற்கு தயாராகியுள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விடுமுறை கால நிகழ்வுகள் மற்றும் கண்கவர் விழா கேளிக்கைகளுடன்.குளிர்கால உற்சவம் உங்களுக்கு குளிர்கால புத்துணர்வை அளிக்கும்.
குடும்பங்கள் மகிழ்ச்சியடைவதற்காக பல விடுமுறை கொண்டாட்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாள் முழுமைக்குமான மற்றும் மாலை நேர கொண்டாட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, குளிர்காலத்தை அதிக கொண்டாட்டத்துடன் கூடியதாக அனுபவியுங்கள்.
- காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை: சிறப்பு இடங்கள் மற்றும் மாலை பொழுதுபோக்குகளுடன் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை விருந்தினர்கள் நாள் முழுவதும் வேடிக்கை நிகழ்வுகளை அனுபவிக்கலாம்.
- குளிர்கால விழா கொண்டாட்டம் - சிறப்பம்சங்கள்
- ஒளிரும் இசை தோட்டம்: ஒளி, ஒலி மற்றும் இயற்கையை இணக்கமாக இணைக்கும் கனவு போன்ற ஒளிரும் தோட்டத்தை அனுபவிக்கவும். மெல்லிசை ஒலி உங்களின் இசை இன்பத்தை அதிகரிக்கும்.தடை சொல்ல முடியாத அளவுக்கு இசையின் தாக்கம் வசீகரிக்கும்.
- மோஷன் கேப்சர் & மெய்நிகர் படப்பிடிப்பு: உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் ‘மோஷன் கேப்சர் மற்றும் மெய்நிகர் படப்பிடிப்பு’ என்ற தளத்தை விருந்தினர்கள் பார்வையிடலாம். திரைப்படத் தயாரிப்பின் புதுயுக உலகை நீங்கள் பார்வையிடுவதன் மூலம் சினிமா மாயாஜாலத்தின் ஒரு பகுதியாக நீங்கள் மாறலாம்.
- விழா அணிவகுப்பு: கருத்தாக்கங்களுடன் கூடிய கலைப்படைப்புகள் கொண்ட வாகனங்கள் ஊர்வலம் உங்களை ஈர்க்கக்கூடியதாக ஒரு மறக்க முடியாத காட்சியாக இருக்கும். கோமாளிகள், வித்தைக்காரர்கள் உள்ளிட்டோர் உங்கள் மனதைக் கவரும் வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கை வழங்குவதன் மூலம் உற்சாகத்தை கூட்டுகிறார்கள்.
- டி.ஜே. ஆன் வீல்ஸ் (DJ On Wheels): டி.ஜே. ஆன் வீல்ஸ் நிகழ்வில் உரத்த குரலில் பாடியபடி ஆரவாரமான நடனங்கள் ஆடுபடுவர்களுக்கு கூட்டம் அலைமோதுகிறது. இது உடனடியாக உங்களை பார்ட்டி மனநிலைக்கு கொண்டு வந்துவிடும்.
- தங்குவதற்கான கவர்ச்சிகரமான திட்டங்கள்: குளிர்கால விழாவின் ஆழ்ந்த அனுபவத்திற்காக சொகுசு ஹோட்டல் - சிதாரா, கம்ஃபோர்ட் ஹோட்டல் - தாரா, சாந்திநிகேதன் - பட்ஜெட் ஹோட்டல், வசுந்தரா வில்லா - பண்ணை வீடு, கிரீன்ஸ் இன் - வசதியான தங்குமிடம் ஆகியவற்றில் பரந்த அளவிலான தங்குவதற்கான அறைகள் உள்ளன. குழுக்களாக வருவோர் பரஸ்பரம் தங்கும் இடத்தை பகிர்ந்து கொள்ளும் வகையிலான வசதிக்கு ஹோட்டல் சஹாரா சிறந்ததாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு www.ramojifilmcity.com என்ற இணையதளத்தை பார்க்கவும் அல்லது 76598 76598 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.