ETV Bharat / bharat

வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!

Rahul Gandhi: கேரள மாநிலம் வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Rahul Gandhi consoles the families of those killed in the elephant attack in Wayanad
வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல்காந்தி ஆறுதல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 2:09 PM IST

வயநாடு (கேரளா): கேரள வயநாடு, தமிழக எல்லையான நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரை ஒட்டி அமைந்துள்ளது. இது தமிழகத்தின் முதுமலை, கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் கேரளா முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் சந்திப்பு பகுதியில் அமைந்துள்ளதால், நீலகிரி மற்றும் வயநாடு பகுதியில் மனித - விலங்கு மோதல் அடிக்கடி ஏற்படுகிறது.

இதன் காரணமாக பல உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி பகுதியில், ரேடியோ காலர் பொருத்தப்பட்ட யானையால், அஜி (42) என்பவர் மிதித்துக் கொல்லப்பட்டதை அடுத்து, உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், தொடரும் வனவிலங்கு தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதியினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (பிப்.16) குருவா தீவு அருகே வனத்துறையின் சுற்றுலா வழிகாட்டியும், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதியில் அதிகரித்து வரும் வன விலங்களின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பெரும் போராட்டத்தை நடத்தினர்.

இந்த தீவிர போராட்டத்தினை அடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, வாரணாசியில் தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு, நேற்று (பிப்.17) இரவு கண்ணூர் மாவட்டம் வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக வயநாடு சென்ற அவர், யானை மிதித்து உயிரிழந்த அஜி குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, யானை தாக்குதலில் உயிரிழந்த வனத்துறை சுற்றுலா வழிகாட்டியின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், சமீபத்தில் புலி தாக்குதலில் உயிரிழந்த பிரஜீஷ் என்பவரின் வீட்டிற்கும் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் உள்ளூர் தலைவர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு சிறை தண்டனை; படகுகளில் கருப்பு கொடி ஏற்றி வேலைநிறுத்தப் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.