திருமலை(ஆந்திரா): மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சன்னி நானாசாகேப் வாக்சவுரே. இவர் பாலிவுட் பட தயாரிப்பாளர்கள் பலருக்கு பண உதவிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. தங்க நகை அணிவதில் ஆர்வம் காட்டும் இவர் அவ்வப்போது இணையத்தில் வைரலாவதையும் வழக்கமாக கொண்டவராக இருக்கிறார்.
இந்த நிலையில், தொழிலதிபர் சன்னி நானாசாகேப் வக்சவுரே அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் வந்து விஐபி சிறப்பு டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீவாரி தரிசனத்திற்கு பிறகு சன்னி நானாசாகேப் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 25 கிலோ தங்க நகைகளை அணிந்தவாறு கோயில் வளாகத்தில் வலம் வந்தனர். அப்போது, கோயிலுக்கு வந்த பலரும் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நிலையில் அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவுக்கு கீழே இந்த குடும்பம் திருப்பதி ஏழுமலையானுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நகை அணிந்துள்ளனர் என்று நடமாடும் நகைக்கடை குடும்பம் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'அனில் அம்பானி இனிமே ஷேர் மார்க்கெட் பக்கம் போகவே கூடாது'; செபியின் அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம்?