வாஷிம்: மகாராஷ்டிராவை சேர்ந்த துணை ஆட்சியர் பூஜா கதேகர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் விசாரணையில் உள்ளன. புனே மாவட்ட துணை ஆட்சியராக இருந்த போது தனது சொந்த வாகனத்தில் அரசு ஊழியருக்கான அடையாள பலகை வைத்தது, சைரன் பொருத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
மேலும், ஐஏஎஸ் தேர்விலும் பல்வேறு சலூகைகளை பெற தனது குடும்ப வறுமானத்தை மறைத்து ஓபிசி சான்றிதழ் வழங்கியது மற்றும் உடல் குறைபாடு கொண்டவர் என போலி ஆவணம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைத்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், பூஜா கதேகரின் வீட்டிற்கு நேற்று (ஜூலை.16) போலீசார் வந்து விசாரணை நடத்திச் சென்றனர். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பூஜா கதேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தனக்கு ஒரு பணி இருந்ததாகவும் அதன் காரணமாக காவல் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், புனே மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் திவாசே மீது பூஜா கதேகர் வன்கொடுமை புகார் அளித்து உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. அது குறித்த புகாரை பெற்றுக் கொள்ளவே நேற்று பூஜா கதேகரின் வீட்டிற்கு போலீசார் வந்துள்ளனர். அதேநேரம், இந்த வன்கொடுமை புகார் குறித்து பதிலளிக்க சுஹாஸ் திவாசே மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக பூஜா கதேகருக்கு மாவட்ட பயிற்சி பணியை மாநில அரசு நிறுத்தி வைத்தது.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த பதிலளிக்க லால் பஹதூர் சாஸ்திரி தேசிய அகடாமியிடம் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவரது பயிற்சி பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நில விவகாரத்தில் விவசாயியை துப்பாக்கி காட்டி மிரட்டியதாக வீடியோ வைராலான நிலையில் அது குறித்து பூஜா கதேகரின் தாயாரிடம் விசாரிக்க போலீசர் முயன்று வருகின்றனர்.
தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் பூஜா கதேகர் தற்போது புனே மாவட்ட அட்சியர் மீது வன்கொடுமை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: உபியில் 40 நாட்களில் 7 முறை பாம்புக் கடி.. உண்மை உடைத்த மருத்துவர்கள்.. அத்தனையும் பொய்யா? - Seven Time Snake bitten in 40 days