ETV Bharat / bharat

செங்கோட்டை தாக்குதல் குற்றவாளி முகமது ஆரிப் கருணை மனு நிராகாரிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை! - Mohammed Arif Mercy Plea reject - MOHAMMED ARIF MERCY PLEA REJECT

24 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது ஆரிப்பின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
President Murmu (ANI Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 7:58 PM IST

டெல்லி: கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி டெல்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு தாக்குதலில் தொடர்புடைய முகமது ஆரிப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.

தொடர் விசாரணையில் முகமது ஆரிப் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என தெரிய வந்தது. அவருக்கு எதிரான வழக்கில் கடந்த 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதம் முதலாக குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் அந்த வழக்கின் நிறைவாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த ஆரிப் மற்றும் 3 லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளும், ஸ்ரீநகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து செங்கோட்டையைத் தாக்கும் திட்டத்தைத் தீட்டியுள்ளனர். அத்திட்டத்தின்படி செங்கோட்டைக்குள் நுழைந்த அபு ஷாத், அபு பிலால் மற்றும் அபு ஹைதர் ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் தனித்தனியாக என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட முகமது ஆரிபின் மரண தண்டனையை 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து 2011ஆம ஆண்டு தூக்கு தண்டனையை எதிர்த்து தொடர்ந்து மனுவில் உச்ச நீதிமன்றம் அவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

ஆனால் அந்த மரண தண்டனைக்கு எதிராக முகமது ஆரிப் மறுஆய்வு மனுத் தாக்கல் செய்த நிலையில், அதுவும் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் ஜனவரி 2014 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு சீராய்வு மனுவை முகமது ஆரிப் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் செங்கோட்டை தாக்குதல் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரான அச்சுறுத்தல் என்று தெரிவித்து சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் குற்றவாளிக்கு சாதகமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்த உச்ச நீதிமன்றம் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து கடைசி வாய்ப்பாக முகமது ஆரிப் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு விண்ணப்பித்தார்.

கடந்த மே 15ஆம் தேதி முகமது ஆரிப் கருணை மனுவுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் மே 27ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவால் நிராகரிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. விரைவில் முகமது ஆரிப்பின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஒடிசா முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்பு! - odisha CM Oath Ceremony

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.