ஆந்திரா: நடந்து முடிந்த மக்களைவைத் தேர்தலோடு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியாகின. இதில், தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 164 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
அதன்படி, ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு கடந்த ஜூன் 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். மேலும், 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில், ஆந்திரப் பிரதேச அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு இலாகாக்கள் இன்று (ஜூன் 14) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம்:
வ.எண் | அமைச்சர்கள் பெயர் | இலாகாக்கள் |
1 | சந்திரபாபு நாயுடு ( முதலமைச்சர்) | சட்டம், ஒழுங்கு |
2 | பவன் கல்யாண் (துணை முதலமைச்சர்) | ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை |
3 | நாரா லோகேஷ் | ஐடி துறை |
4 | கிஞ்சரபு அட்சண் நாயுடு | விவசாயத் துறை |
5 | கொள்ளு ரவிந்திரா | சுரங்கத்துறை |
6 | நாதெண்டல மனோகர் | நுகர்வோர் துறை |
7 | பொன்குரு நாராயணா | நகர்ப்புர வளர்ச்சி த்துறை |
8 | அனிதா வன்கலபுடி | உள்நாட்டு விவகாரங்கள் துறை |
9 | சத்யகுமார் யாதவ் | மருத்துவத் துறை |
10 | டாக்டர். நிர்மலா ராமன்நாயுடு | நீர்வளத்துறை |
11 | நாசயம் முகம்மது ஃபாரூக் | நீதித்துறை |
12 | அனம் ராம்நாராயண ரெட்டி | நன்கொடைகள் துறை |
13 | பையாவுல கேசவ் | திட்டமிடல் |
14 | அனங்கனி சத்ய பிரசாத் | வருவாய்த்துறை |
15 | கொலுசு பார்த்சாரதி | வீட்டுவசதி வாரியத் துறை |
16 | வீரன்நேஞ்சய சுவாமி | சமூகநலத்துறை |
17 | கோட்டிப்பட்டி ரவிக்குமார் | ஆற்றல் துறை |
18 | துர்கேஷ் | சுற்றுலா துறை |
19 | கும்மடி சந்தியா ராணி | பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை |
20 | பிசி ஜனார்தன் ரெட்டி | சாலைகள் துறை |
21 | டி.ஜி.பரத் | தொழில் துறை |
22 | எஸ்.சவித்தா | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை |
23 | வாசம்செட்டி சுபாஷ் | இன்சூரன்ஸ் மெடிக்கல் சர்வீஸ் |
24 | கொண்டப்பள்ளி ஸ்ரீநிவாஸ் | சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை |
25 | மண்டிப்பள்ளி ராம்பிரசாத் ரெட்டி | விளையாட்டுத்துறை |
இதையும் படிங்க: இந்திய கடற்படைக்கு 26 ரபேல் விமானங்கள் கொள்முதல்! இந்தியா - பிரான்ஸ் பேச்சுவார்த்தை எப்போது? - Rafale marine jet