புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே அடுத்த வாஷிம் மாவட்ட துணை ஆட்சியர் பூஜா கேத்கரின் தாயார், கையில் துப்பாக்கியுடன் விவசாயி ஒருவரை மிரட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் கூறுகையில், பூஜா கேத்கரின் தந்தை திலீப் கேத்கர் அரசுப் பணியில் இருந்த போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொந்தமாக நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது.
பல்வேறு இடங்களில் அவர் சொந்தமாக நிலங்களை வாங்கிக் குவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தான் புனே மாவட்டத்தின் முல்ஷி தெஹ்சில் பகுதியில் 25 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும், அருகில் இருந்த விவசாயிகளின் இடங்களையும் ஆக்கிரமிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.
IAS officer Pooja Khedkar's father, Dilip Khedkar, has allegedly amassed wealth and bought 25 acres in Mulshi tehsil, Pune.
— Sneha Mordani (@snehamordani) July 12, 2024
The family reportedly tried to encroach on neighboring land, and Pooja's mother, Manorama Khedkar, allegedly threatened farmers with a pistol.
Attempts… pic.twitter.com/KlETPBXBmb
இந்நிலையில், தான் பூஜா கேத்கரின் தாய் மனோரமா கேத்கர் பவுன்சர்களின் உதவியுடன் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விவசாயிகள் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனக் தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம் பூஜா கேத்கரின் வழக்கறிஞர் ரவீந்திர சுதர் கூறுகையில், வைரல் வீடியோ கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்டது என்றும் முல்ஷி தெஹ்சில் பகுதியில் உள்ள 25 ஏக்கர் நிலம் கேத்கர் குடும்பத்திற்கு சொந்தமானது, அந்த இடத்திற்கு செல்ல முயன்ற போது மனோரமா கேத்கரை அங்குள்ள விவசாயிகள் தடுக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் கூறினார். மேலும், மனோரமா கேத்கர் கையில் இருக்கும் துப்பாக்கி முறையாக உரிமம் பெற்றது மற்றும் அவரது தற்காப்புக்காக வைத்திருந்ததாகவும் ரவீந்தர் சுதர் தெரிவித்தார்.
ஏற்கனவே பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை பூஜா கேத்கர் பயன்படுத்தி வருவதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. ஒபிசி வகுப்பின் கீழ் வசதிகளை பெற தனது தந்தையின் சொத்து மதிப்பை மறைத்து போலி ஆவணம் வழங்கியது, உடல் குறைபாடு குறித்து போலி ஆவணம் வழங்கியது, தனக்கு சொந்தமான சொகுசு காரில் மகாராஷ்டிர அரசின் பலகை மற்றும் சைரன் வைத்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.
இந்த புகார் குறித்து விசாரிக்க பணியாளர் மற்றும் பயிற்சி துரையின் கூடுதல் இயக்குநர் தலைமையிலான ஒரு நபர் விசாரணையை ஆணையம் அமைத்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் விசாரணை ஆணையம் குறித்து கருத்து தெரிவிக்க தான் அனுமதிக்கப்பட்ட நபர் இல்லை என்றும் பூஜா கேத்கர் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் சர்ச்சை: ஒரு நபர் ஆணையம் விசாரிக்க மத்திய அரசு உத்தரவு! - IAS Officer Puja Khedkar