பெடூல் : நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் போலீசார் பெடூல் மாவட்டத்தில் இருந்து தங்களது சொந்த மாவட்டமான ராஜ்கர்க் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பேருந்தில் 40 துணை ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் பயணித்து உள்ளனர். அதிகாலை 4 மணி வாக்கில் பேருந்து போபால் - பெடூல் ஹைவே பகுதியில் சென்று கொண்டு இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 21 போலீசார் மற்றும் காவலர்கள், துணை ராணுவத்தினருக்கு படுகாயம் ஏற்பட்டு உள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிந்த்வாரா பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு திரும்பிய போது பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 8 காவலர்கள் தீவிர காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மற்ற போலீசாருக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், ஷாபூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : உதயநிதியின் சனாதன தர்மம் கருத்து தவறானது.. அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" - தெலங்கானா முதலமைச்சர்! - Revanth Reddy Santan Dharma Issue