டெல்லி: நாட்டின் 78வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. செங்கோட்டை கொத்தளத்தில் 11வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். செங்கோட்டையில் மழை சாரலுக்கு மத்தியில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது, ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.
சுதந்திர தினவிழா உரையை ஜெய் ஹிந்த் என தொடங்கிய பிரதமர் மோடி, விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து கூறினார். பின்னர், மத்திய அரசின் சார்பில் மக்களுக்கு செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களை விக்சித் பாரத் என்ற பெயரில் பட்டியலிட்டார். மேலும், சுதந்திர தினத்தை கொண்டாட பாடுபட்ட விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களின் தியாகங்களை போற்றினார்.
#WATCH | PM Modi says, " how can we forget the corona period? our country administered vaccines to crores of people the fastest of all, across the world. this is the same country where terrorists used to come and attack us. when the armed forces of the country execute surgical… pic.twitter.com/PvbvScEUNK
— ANI (@ANI) August 15, 2024
மேலும், கடந்த சில ஆண்டுகளாக இயற்கை சீற்றங்களை தேசம் சந்தித்து வருகிறது. பலரும் தங்களின் உறவினர்கள், சொத்துகளை இழந்துள்ளனர். நமது தேசம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. கேரளாவின் வயநாடு சம்பவம் வருத்தம் அளிக்கிறது. அவர்களுக்கு தேசம் துணையாக நிற்கும் என்பதை உறுதி அளிக்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 40 கோடி இந்தியர்கள் ஒன்றுசேர்ந்து ரத்தம் சிந்தி பிரிட்டிஷ் ஆட்சியை வேறோடு அகற்றியதைபோல், தற்போது 140 கோடி மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் 2047-ல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்று கூறினார்
இவ்விழாவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாணவா்கள், இளைஞா்கள், விவசாயிகள், பெண்கள், பழங்குடியினா், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட மத்திய அரசின் நலத் திட்டங்களால் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் சுமாா் 7,000 போ் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 78வது சுதந்திர தின விழா: செங்கோட்டையில் பிரதமர் மோடி உரை