ETV Bharat / bharat

வாஜ்பாய் பதவியை துச்சமென மதித்தார்...பிரதமர் நரேந்திர மோடி எழுதிய வாஜ்பாயின் 100வது பிறந்த நாள் கட்டுரை! - VAJPAYEE 100TH BIRTH ANNIVERSARY

வாய்ப்புகிடைத்ததே என்பதற்காக பதவியில் வாஜ்பாய் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. பதவியை காப்பாற்றிக் கொள்ள குதிரை பேரத்தில் ஈடுபடும் வழியை தேர்வு செய்வதற்கு பதில் பதவியில் இருந்து விலகினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-பிரதமர் நரேந்திர மோடி
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-பிரதமர் நரேந்திர மோடி (Image credits-Narendramodi.in)
author img

By Narendra Modi

Published : 12 hours ago

புதுடெல்லி: நமக்கெல்லாம் டிசம்பர் 25ஆம் தேதியான இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மிகவும் அன்புக்குரிய முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100ஆவது பிறந்த நாளை நமது நாடு கொண்டாடுகிறது

வாஜ்பாய் ஏற்படுத்திய தாக்கம்: 21ஆம் நூற்றாண்டை நோக்கி இந்தியாவின் மாற்றத்தை கட்டமைத்தவராக இருந்த அடல் அவர்களுக்கு நமது தேசம் எப்போதும் நன்றியுடையதாக இருக்கும். 1998ஆம் ஆண்டு அவர் பிரதமராக பதவி ஏற்றபோது நமது தேசம் அரசியல் நிலையற்ற தன்மை எனும் காலகட்டத்தை கடந்து வந்திருந்தது. வெறும் 9 ஆண்டுகில் நான்கு மக்களவை தேர்தல்கள் நடைபெற்றன. இந்தியாவின் மக்கள் பொறுமை இழந்து விட்டனர். ஆட்சியில் இருந்த அரசுகள் வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்பதில் மக்களுக்கு சந்தேகம் இருந்தது. வலுவான செயலாற்றும் அரசின் ஆட்சியை அளித்து நிச்சயமற்ற தன்மையை அடல் பிகாரி வாஜ்பாய் மாற்றினார். மிகவும் எளிய குடும்ப சூழலில் இருந்து வந்து சாதாரண மனிதர்களின் வாழ்வாதார போராட்டங்களை உணர்ந்தவர். திறமையான நிர்வாகமாக மாற்றும் சக்திக் கொண்டிருந்தார்.

நம்மை சுற்றி உள்ள பல்வேறு துறைகளில் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் தலைமை ஏற்படுத்திய நீண்டகால தாக்கத்தை யார் ஒருவரும் பார்க்க முடியும். தொலைபேசி மற்றும் தொலை தொடர்புகள், தகவல் தொழில்நுட்ப உலகில் அவரது ஆட்சியின் சகாப்தம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. மிகவும் பன்முகத்தன்மை கொண்ட இளைஞர் சக்திக்கு இவையெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது என்ற வகையில் குறிப்பாக நம்மை போன்ற தேசத்துக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அடல் பிகாரி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சாதாரண மக்களும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான மிகவும் தீவிரமான முயற்சியாகும்.

பொருளாதார எழுச்சி: அதே நேரத்தில் இந்தியாவை இணைப்பதில் தொலை நோக்கு கண்ணோட்டமும் இருந்தது. இந்தியாவை குறுக்கும், நெடுக்குமாக இணைக்கும் தங்க நாற்கர சாலை திட்டத்தை இன்றும் கூட பெரும்பாலான மக்கள் நினைவு கூர்கின்றனர். இதற்கு இணையாக பிரதமரின் கிராம் சதக் யோஜனா போன்ற முயற்சிகளில் உள்ளூர் அளவில் இணைப்புகளை விரிவாக்கம் செய்ததில் வாஜ்பாய் அரசு குறிப்பிடத்தக்க பங்காற்றியது. அதே போல டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைப் பணிகளுக்காக அவரது அரசு விரிவான முன்னெடுப்புகளை மேற்கொண்டது. இந்த திட்டம் உலக தரத்திலான கட்டமைப்புத் திட்டமாக நிலைத்திருக்கிறது. ஆகவே, வாஜ்பாய் அரசானது பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் ஊக்கமளிக்காமல், தவிர தொலைதூர பகுதிகளை நெருக்கமாக இணைக்க, ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பையும் வளர்த்தது.

சமூகத்துறை என்று வரும்போது, சர்வ சிக்ஷா அபியான் போன்ற முயற்சி, குறிப்பாக ஏழைகள், விளிம்பு நிலை பிரிவினர் உட்பட தேசம் முழுவதும் உள்ளோருக்கு நவீன கல்வியை கிடைக்க செய்யும் வகையிலான இந்தியாவை கட்டமைக்க வாஜ்பாய் எப்படி கனவு கண்டார் என்பது வெளிப்படுகிறது. அதே சமயம் பல தசாப்தங்களாக தேக்க நிலையை ஏற்படுத்தும் பாராபட்சத்துடன் கூடிய பொருளாதாரத்தத்துவம் ஊக்குவிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வந்த நிலையில் அவரது அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்து இந்தியாவின் பொருளாதார எழுச்சிக்கு களம் அமைத்தார்.

போக்ரான் அணுகுண்டு சோதனை: வாஜ்பாய் அவர்களின் தலைமைத்துவத்துக்கு மிகச் சிறந்த உதாரணத்தை 1998ஆம் ஆண்டு கோடை காலத்தில் காணமுடிந்தது. அவரது அரசு அந்த ஆண்டின் மே 11ஆம் தேதிதான் பதவி ஏற்றிருந்தது. இந்த நிலையில் ஆபரேஷன் சக்தி என அறியப்படும் போக்ரான் அணுகுண்டு சோதனையை இந்தியா மேற்கொண்டது. இந்த சோதனைகள் இந்தியாவின் விஞ்ஞானிகள் சமூகத்தின் சக்தியை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. இந்தியா இந்த சோதனைகளை மேற்கொண்டதைக் கண்டு உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்தன. உலகநாடுகள் தங்கள் அதிருப்தியை தெளிவான முறையில் வெளிப்படுத்தின.

எந்த ஒரு தலைவரும் வளைந்து கொடுக்கும் தன்மையைக் கொண்டிருப்பர். ஆனால், அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், மிகவும் வித்தியாசமாக செயல்பட்டார். அ்பபடி என்ன நடந்தது? இரண்டு நாட்கள் கழித்து மே 13ஆம் தேதி மற்றும் சில சோதனைகளுக்கு அழைப்பு விடுத்த இந்திய அரசு தமது முடிவில் இருந்து பின்வாங்காமல் உறுதியாக இருந்தது. மே 11ஆம் தேதி சோதனை, அறிவியல் திறனை வெளிப்படுத்தியது. 13ஆம் தேதி மேற்கொண்ட சோதனையானது உண்மையான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியது. அச்சுறுத்தல் அல்லது அழுத்தத்துக்கு இந்தியா பணியும் என்ற நாட்கள் கடந்த காலமாக இருந்தது என்பதை இந்த செய்தி உலகத்துக்கு சொன்னது. இந்தியா மீதான சர்வதேச அளவிலான தடைகள் இருந்த போதிலும் அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியோடு இருந்தது. உலக அமைதியின் வலிமையான ஆதரவாளராக அதே சமயம் இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான உரிமையை வெளிப்படுத்தியது.

பிரதமர் நரேந்திர மோடி-முன்னாள் பிரதமர் வாஜ்பாய்
பிரதமர் நரேந்திர மோடி-முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (Image credits-Narendramodi.in)

அரசியல் பயணம்: வாஜ்பாய் இந்திய ஜனநாயகத்தை புரிந்து வைத்திருந்தார். தவிர, மேலும் அதனை வலுவாக்க வேண்டிய தேவை இருப்பதாக உணர்ந்தார். இந்திய அரசியல் கூட்டணி மறு வரையை தேசிய ஜனநாய கூட்டணியை அடல் பிகாரி வாஜ்பாய் முன்னின்று உருவாக்கினார். மக்களை ஒன்றிணைத்தார். வளர்ச்சிக்கான, தேசிய செயல்பாடுகளுக்கான பிராந்திய குறிக்கோளுக்கானதாக தேசிய ஜனநாய கூட்டணியை சக்தி வாய்ந்தாக உருவாக்கினார். அவரது அரசியல் பயணம் முழுவதும் அவரது நாடாளுமன்ற புத்திசாலித்தனம் காணப்பட்டது.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எம்பிக்களைக் கொண்ட கட்சியில் இருந்து அவர் வந்திருந்தார். அந்த காலகட்டத்தில் அனைத்து அதிகாரமும் கொண்ட காங்கிரஸின் வலிமையைக் குலைக்க அவரது வார்த்தைகள் போதுமானதாக இருந்தது. பிரதமராக அவர், எதிர்கட்சியின் விமர்சனங்களை உண்மை மற்றும் அதன் பொருளுடன் வலுவிழக்கச் செய்தார். அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும்பாலும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். அவரை துரோகி என்று சொல்லும் அளவுக்கு காங்கிரஸ் தரம் தாழ்ந்த நிலையில் விமர்சித்தபோதும், ஒருபோதும் யார் ஒருவர் மீதும் அவர் அதிருப்தியை கொண்டிருந்த வரலாறு இல்லை.

அவர் சந்தர்ப்பவாதத்தால் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டவர் அல்ல. அசிங்கமான அரசியல் அல்லது குதிரை பேரத்தில் ஈடுபடும் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு பதில் 1996ஆம் ஆண்டு பதவி விலகுவதை முக்கிய நோக்கமாக கொண்டிருந்தார். 1999ஆம் ஆண்டு அவரது அரசு ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டது. அப்போது நடந்த ஒழுக்கக்கேடான அரசியலுக்கு எதிராக சவாலாக செயல்படும்படி பலர் அவரிடம் சொன்னார்கள். ஆனால், அப்போது அவர் விதிமுறைப்படி செயல்படுவதற்கே முக்கியத்துவம் கொடுத்தார். இறுதியில், மக்களிடம் இருந்து மற்றொரு உறுதியான ஆதரவைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார்.

வாஜ்பாயியின் ஆளுமை: நமது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் கடமை வரும்போது கூட, அடல் பிகாரி வாஜ்பாய் உயர்ந்து நின்றார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் தியாகம் அவர் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவசரநிலை பிரகடனத்துக்கு எதிரான இயக்கத்தின் தூணாக அவர் இருந்தார். அவசர நிலை பிரகடனத்துக்குப் பின்னர் 1977ஆம் ஆண்டு தேர்தலின் போது அவர் தமது சொந்த கட்சியை(ஜன சங்கம்) ஜனதா கட்சியுடன் இணைக்க ஒப்புக் கொண்டார். இது அவருக்கும் பிறருக்கும் ஒரு வலி தரும் முடிவாக இருந்திருக்கும் என்பதை நான் உறுதிபடக் கூறிக் கொள்கின்றேன். ஆனால் அரசியலமைப்பைப் பாதுகாப்பதே அவருக்கு முக்கியமானதாக இருந்தது.

இந்திய கலாச்சாரத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் எவ்வளவு தூரத்துக்கு ஆழமான பற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன பின்னர், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியில் உரையாற்றிய முதல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். உலக அரங்கில் அழியாத முத்திரையை பதிக்கும் வகையில் இந்திய பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் மீது அவர் அளவுகடந்த பெருமை கொண்டிருந்தார் என்பதை இந்த ஒரு செயல் மூலம் அறிய முடிகிறது.

அடல் பிகாரி வாஜ்பாயியின் ஆளுமை காந்தமாக ஈர்க்கக் கூடியது. இலக்கியம் மற்றும் வெளிப்பாட்டின் மீதான அவரது அன்பால் அவரது வாழ்க்கை வளம் மிகுந்ததாக இருந்தது. ஒரு சிறந்த எழுத்தாளராக கவிஞராக, அவர் ஊக்கமளிக்கவும், சிந்தனையைத் தூண்டவும், ஆறுதல் அளிக்கவும் தமது வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவரது கவிதைகள், தேசத்துக்கான அவரது உளப் போராட்டங்கள் மற்றும் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. இவை பல்வேறு வயதினருக்கு மத்தியில் தொடர்ந்து நீடித்து நிலைத்திருக்க செய்கிறது.

பாஜகவின் அடித்தளம்: என்னைப் போன்ற பாரதிய ஜனதா கட்சியின் பல நிர்வாகிகளுக்கு, அடல் பிகாரி வாஜ்பாய் போன்றோருடன் உரையாடவும் கற்றுக்கொள்ளவும் முடிந்தது என்பது எங்களுக்குக் கிடைத்த பாக்கியமாகும். பாஜகவுக்கான அவரது பங்களிப்பு கட்சிக்கு அடித்தளமானதாகும். அந்த நாட்களில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தனது பெருந்தன்மையைக் காட்டினார். அந்த காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முன்நின்று முற்போக்கான முறையில் நடத்து கொண்டது அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தியது.

எல்.கே.அத்வானி, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி போன்ற வலிமை வாய்ந்தவர்கள் துணை நின்க, ஆரம்ப கால கட்டமைப்பு ஆண்டுகளில் சவால்கள், பின்னடைவுகள் மற்றும் வெற்றிகள் மூலம் கட்சியை வழிநடத்தினார். கொள்கை மற்றும் அதிகாரம் என்பதற்கிடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலை வரும்போதெல்லாம் அவர் எப்போதுமே முந்தையதை தேர்வு செய்தார். காங்கிரஸ் கட்சியைத் தவிர ஒரு மாற்று உலகப் பார்வை சாத்தியம் என்பதை தேசத்தை அவரால் நம்ப வைக்க முடிந்தது. அத்தகைய உலக கண்ணோட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.

அவரது 100ஆவது பிறந்த நாளில் அவரது கொள்கைகளை நனவாக்குவது என்றும் அவரது இந்தியாவுக்கான கண்ணோட்டத்தை செயல்படுத்துவோம் என்றும் நமக்கு நாமே மறுபடி அர்ப்பணிப்பு மேற்கொள்வோம். நல்லாட்சி, ஒற்றுமை, முன்னேற்றம் ஆகிய அவரது கொள்கைகளை உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம்.நமது தேசத்தின் ஆற்றல் மீது அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, உயர்ந்த இலக்கை அடையவும் கடினமாக உழைக்கவும் நம்மைத் தூண்டுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.